பாலாவுக்கு கம்பேக் படமா?.. அருண் விஜய்க்கு கை கொடுத்ததா வணங்கான்?!. முழு விமர்சனம்!...

by Ramya |
vanagaan
X

இயக்குனர் பாலா: தமிழ் சினிமாவில் மற்ற இயக்குனர்களைப் போல் இல்லாமல் தனக்கென ஒரு தனி பாதியை உருவாக்கி வைத்திருப்பவர் இயக்குனர் பாலா. இவர் இயக்கிய திரைப்படங்களான சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து இருக்கின்றது.

இருப்பினும் இடையில் தொடர் தோல்வி, மனைவியின் விவாகரத்து, நெகட்டிவ் விமர்சனங்கள் என்று தொடர்ந்து தனது கெரியரிலும் தோல்வி அடைந்திருந்தார் இயக்குனர் பாலா. நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலா இயக்கத்தில் தயாரான திரைப்படம் தான் வணங்கான். முதலில் நடிகர் சூர்யாவை வைத்து படத்தின் படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வந்த நிலையில் பின்னர் சில கருத்து வேறுபாடு காரணமாக சூர்யா இந்த திரைப்படத்திலிருந்து விலகிவிட்டார்.


அதன் பிறகு அருண் விஜய் இந்த திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வந்தார். இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கின்றது. படம் கேடிஎம் பிரச்சனை காரணமாக தாமதமாக வெளியானது. காலை 9 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய படமானது மிக தாமதமாக வெளியானது. இது ரசிகர்களிடையே மிக பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

படத்தின் கதை: இந்த திரைப்படத்தில் அருண் விஜய் காது கேளாத வாய் பேச முடியாத ஒரு நபராக இருக்கின்றார். ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் வேலை செய்து வருகின்றார். அங்கு இருக்கும் கண் தெரியாத பெண் பிள்ளைகள் குளிப்பதை சிலர் பார்த்து விட அவர்களை கொன்றுவிட்டு காவல் நிலையத்தில் ஆஜர் ஆகின்றார் அருண் விஜய். நீதிமன்றத்தில் துருவித் துருவி எதற்காக கொலையை செய்தீர்கள் என்று கேட்க, அதற்கு அருண் விஜய் பதில் சொல்லவில்லை. கடைசியில் அவர் வெளியில் வந்தாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.

கதாபாத்திரங்களின் நடிப்பு: இதுவரை பார்க்காத ஒரு அருண் விஜயை இந்த படத்தில் நம்மால் பார்க்க முடிகின்றது. மாற்றுத்திறனாளியாக மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார். அவரின் காதலியாக நடித்திருக்கும் ரோஷினியும் மிகச்சிறப்பாக நடித்திருக்கின்றார். மேலும் போலீஸ் அதிகாரியாக சமுத்திரக்கனி, நேர்மையான நீதிபதியாக மிஸ்கின் தங்களுக்கான கதாபாத்திரங்களை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

படத்தின் விமர்சனம்: பாலா திரைப்படம் என்றாலே அது தனியாக தெரியும். பாலாவுக்கான வன்முறை படமாக முழுக்க முழுக்க இருக்கின்றது. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தனித்துவமாக நடிக்க வைத்திருக்கின்றார். முதல் பாதி சுவாரஸ்யமாக இருந்தாலும் நம் அனைவரையும் கதைக்குள் கொண்டு செல்வதற்காக முதல் பாதி முழுவதையும் எடுத்துக் கொண்டார்.

கிறிஸ்துவ மதத்தை வைத்து பாலா செய்திருந்த காமெடிகளை கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம். இரண்டாம் பாதியில் அருண் விஜய் என்ன ஆனார்? அவர் நீதிமன்றத்தில் சொன்னது என்ன? அவனிடமிருந்து அந்த காரணத்தை சமுத்திரகனி வாங்குவதற்கு என்ன செய்தார்? என்று திரை கதையை சிறப்பாக நகர்த்தி இருக்கின்றார் பாலா.


ஆனால் பாலாவுக்கான டச் இந்த திரைப்படத்தில் மிஸ் ஆனது போல் இருந்தது. இப்படத்தின் மூலமாக இன்னும் பாலா அப்டேட் ஆக வேண்டும் என்கின்றது போல் தோன்றியது. பாடல்கள் மிகச் சிறப்பாக வந்திருந்தது. கதையின் மையக்கருத்து இன்னும் அழுத்தமாக இருந்திருந்தால் படம் சிறப்பாக இருந்திருக்கும். இப்படத்தில் அருண் விஜயின் நடிப்பு மிகச் சிறப்பு. சாம் சி எஸ் மிகச் சிறப்பாக பின்னணி இசை செய்திருக்கின்றார் என்பது ரசிகர்களின் கருத்தாக இருந்து வருகின்றது.

Next Story