மலையாளத்தில் மாஸ் பண்ணும் திரிஷா… Identity டிரெய்லர் எப்படி இருக்கு?
டோவினோ தாமஸ் ஐடென்டிட்டி எப்படி இருக்கு?
Identity: இரண்டாவது இன்னிங்ஸில் கலக்கி வரும் திரிஷாவின் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் ஐடென்டிட்டி படத்தில் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.
மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் டோவினோ தாமஸ். வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் முதலிடத்தில் இருக்கிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் அடுத்து ஐடென்டிட்டி திரைப்படம் உருவாகியிருக்கிறது.
இத்திரைப்படத்தில் அவருக்கு நாயகியாக நடிகை திரிஷா நடிக்க இருக்கிறார். பல ஆண்டுகள் கழித்து திரிஷா மீண்டும் மலையாளத்தில் கொடுக்க இருக்கிறார். இப்படத்தில் வில்லனாக வினய் நடிக்க இருப்பது மேலும் ரசிகர்களுக்கு படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்து இருக்கிறது.
மலையாளத்தில் முக்கிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ஃபாரன்சிக். மருத்துவத்துறையில் நடக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படத்தை அகில் பால் மற்றும் அனஸ்கான் இருவரும் இணைந்து இயக்கியிருந்தனர். வெற்றி இயக்குனர்கள் என்பதால் தற்போதைய திரைப்படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.
ஒரு குற்றத்தை நேரில் பார்க்கும் திரிஷா குற்றவாளியை கண்டுபிடிக்க காவல்துறைக்கு உதவுகிறார். அந்த குழுவில் படம் வரையும் ஆளாக இருக்கிறார் டோவினோ தாமஸ். குற்றவாளி யார் கதையின் பின்னணி என்ன என்பதை மையமாக வைத்து திரைப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இப்படத்தின் தமிழ் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில், பிரம்மாண்ட காட்சிகளுடன் குற்றம் குறித்து விசாரிக்கும் அதிகாரியாக வினய், சாட்சியாக திரிஷா, குற்றவாளியை கண்டுபிடிக்கும் ஆர்டிஸ்ட் ஆக டோமினோ தாமஸ் என கதைக்களமே வித்தியாசமாக ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கனவே பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலம் தன்னுடைய இரண்டாவது இன்னிசை திரிஷா தொடங்கி இருக்கிறார். அந்த வகையில் ஏற்கனவே, லியோ திரைப்படத்தை முடித்து இருக்கும் திரிஷா தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களில் நடித்து வருகிறார். சூர்யா45, தக் லைஃப் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.