உங்களுக்கெல்லாம் கோபமே வராது... நீங்க எல்லாம் சாந்த சொரூபிகள்... கச்சேரியில் இளையராஜாவின் கோபம்!

By :  SANKARAN
Published On 2025-06-16 09:51 IST   |   Updated On 2025-06-16 09:55:00 IST

சென்னையில் தொடங்கிய இளையராஜாவின் இன்னிசைக் கச்சேரி, கும்பகோணம், கோவை, நெல்லை என தமிழகத்தில் பல இடங்களில் அரங்கேறி ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை அடித்தது. அந்த வகையில் பாரதியார், பாரதிதாசன் வாழ்ந்த புதுச்சேரியிலும் முதன் முறையாக இளையராஜாவின் இன்னிசைக்கச்சேரி கடந்த ஜூன் 14ல் அரங்கேறியது.

பாடல்கள் தேர்வும், அதை அளித்த விதமும் பார்வையாளர்களை சுமார் 4 மணி நேரமாக இருக்கையில் கட்டிப்போட்டுவிட்டார் இளையராஜா என்றுதான் சொல்ல வேண்டும். இந்தக் கச்சேரியிலும் ஜனனீ ஜனனீ, தென்றல் வந்து தீண்டும்போது, தென்பாண்டிச் சீமையிலே, வழிநெடுக, பொறந்தது பனையூரு மண்ணு என 5 பாடல்களைப் பாடி அசத்தினார்.

வழக்கம்போல ரசிகர்களின் ஆரவாரம் ஆர்ப்பரித்தது. எப்போது பார்த்தாலும் இளையராஜாவுக்குக் கோபம் அதிகம் வரும் என்று பலரும் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். இதை இளையராஜாவே பலமுறை விமர்சித்துள்ளார். புதுச்சேரியிலும் இந்த விமர்சனத்திற்கு இளையராஜா பதிலடி கொடுத்துள்ளார். கங்கை அமரன் சொர்க்கமே என்றாலும் என்று பாட ஆரம்பித்தார். அப்போது டிரம்ஸ் இசை சரியாக வரவில்லை. உடனே ஒரே லைனில் பாட்டை நிறுத்தினார்.

அப்போது இளையராஜா ஏன்யா என் பேரைக் கெடுக்க நினைக்கிறீங்கன்னு கோபத்தில் சொன்னார். அதே போல ஒரு பாடல் சரியாக வரவில்லை. ரிகர்சல் எல்லாம் பார்த்துட்டுத்தானே வந்துருக்கீங்க. அப்புறம் என்னன்னு கோபப்பட்டார். அப்போது 'நான் ஏதாவது சொன்னா உடனே இளையராஜா ரொம்ப கோப்பபடுறாருன்னு சொல்றீங்க. நீங்க எல்லாம் சாந்த சொரூபிகள். கோபமே பட மாட்டீங்க'ன்னு இளையராஜா அவர் மீது விழும் விமர்சனங்களுக்கு கிண்டலாகப் பதிலடி கொடுத்தார்.


வழக்கம்போல ஒரே மாதிரியான பாடல்கள் தான் எல்லாக் கச்சேரியிலும் பாடுகிறார் என்று ஒரு குற்றச்சாட்டு இருந்தது. அதற்கு இந்தக் கச்சேரியில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் இளையராஜா. தவிர்க்க முடியாத ஒரு சில பாடல்களைத் தவிர மற்ற எல்லாமே புதுப்பாடல்கள்தான். அதே போல டிக்கெட் வாங்கிவிட்டு எழுந்து நின்று பார்த்ததாக பலரும் குற்றச்சாட்டு தெரிவித்து வந்தனர். அந்த வகையில் சூரியன் எப்எம். வழங்கிய இந்தக் கச்சேரி எந்தக் குற்றச்சாட்டுக்கும் இடமின்றி சிறப்பாக நடந்தது.

Tags:    

Similar News