குழப்பமான கேரக்டர், சொதப்பலான ரைட்டிங்... நரிவேட்டையையும் விட்டு வைக்காத புளூசட்டைமாறன்

சேரன் நடிப்பில் நேற்று வெளியான மலையாளப் படம் நரிவேட்டை. இதில் சேரனின் புதுமையான நடிப்பைப் பார்க்கலாம். தமிழில் டப்பானது. இந்தப் படத்திற்கு பாசிடிவான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்தப் படத்தைப் பற்றி பிரபல யூடியூபரும், சினிமா விமர்சகருமான புளூசட்டைமாறன் என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா...
2003ல கேரளாவுல வயநாடு பகுதியில் முத்தண்ணா என்ற இடத்தில் ஒரு ஆதிவாசி குடியிருப்பை அகற்றும்போது அதிகாரிகளுக்கும், அவங்களுக்கும் நடக்குற பிரச்சனையை வச்சிப் படமா எடுத்துருக்காங்க. உடனே அவங்களுக்கு நல்ல ஒரு குடியிருப்பு பகுதியை அமைத்து தருவதாக அரசியல் தலைவர்கள் வந்து உத்தரவாதம் கொடுக்குறாங்க.
அது வாக்குறுதியாவே இருக்குது. அதனால அவங்க களத்துல இறங்கிப் போராடுறாங்க. போராட்டத்தை ஒடுக்குறதுக்காக ஆயுதப்படையை அனுப்புறாங்க. அதுல வேண்டா வெறுப்பா சேர்ந்த நம்ம ஹீரோ கான்ஸ்டபிளா இருக்காரு.
அங்கே போனபிறகு அவங்க மேல அவருக்கு நல்ல அபிப்ராயம் இல்ல. ஆனா கொஞ்ச நாள் கழிச்சித்தான் அவருக்குத் தெரிய வருது. ஆட்சியாளர்கள் சட்டத்துக்குப் புறம்பா அவங்களை ஒடுக்க நினைக்கிறாங்கன்னு. அந்த சூழலில் ஹீரோ தனது மனசாட்சியை அவுத்து ஓரமா வச்சிட்டு தன்னோட கோரமுகத்தைக் காட்டுறாரு.
ஆட்சியாளர்களும், அதிகாரவர்க்கத்தினரும் எதிர்த்து என்ன செய்துவிட முடியும்னு எதிர்க்குறதுதான் கதை. திரைக்கதையில தான் பெரிசா கோட்டை விட்டுருக்காங்க. எந்த ஒரு கேரக்டரையுமே சரியா வடிவமைக்காததுதான் குறை.
வழக்கமா மலையாள சினிமாவுல ஒரு கற்பனைக் கதையைக் கூட உண்மைக்கு நெருக்கமா எடுத்துடுவாங்க. ஆனா இது உண்மைக்கு நெருக்கமான கதை. ரொம்ப அந்நியமா எடுத்து வச்சிருக்காங்க.

விடுதலை, ஜெய்பீம் படங்கள் அவ்ளோ பிரமாதமா இருக்கும். அந்த வகைக் கதை தான் இது. இந்தப் படத்துல மையக் கதாபாத்திரத்துலயே ரொம்ப குழப்பமா இருக்கு. சாமானிய மக்களின் பிரச்சனையைச் சொல்லப் போற கதை மாறி ஹீரோயிசமான கதையா மாறிடுச்சு. உண்மைச் சம்பவம் அதைச் சுற்றிப் பின்னப்பட்ட நல்ல கதை. சொதப்பலான ரைட்டிங்னால ரொம்ப சுமாரான படமாப் போயிடுச்சு என்கிறார் புளூசட்டை மாறன்.