மாஸா? மொக்கையா? – ஹாட்ஸ்டாரில் ரிலீஸாகி இருக்கும் "பொன்மான்" விமர்சனம்!

by Akhilan |
Ponman
X

PonMan: மலையாளத்தில் ஹிட் கொடுத்த பேசில் ஜோசப்பின் அடுத்த திரைப்படம் பொன்மான் ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது. இப்படத்தினை பார்க்கலாமா இல்லை எஸ்கேப் ஆகலாமா என்பதன் விவரமான திரைவிமர்சனத்தின் தொகுப்புகள்.

ஜோதிஷ் சங்கர் இயக்கத்தில் பேசில் ஜோசப், சஜின் கோபு, லிஜோமோல் ஜோஸ், தீபக் பரம்போல் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் வர்க்கீஸ் இசையமைத்து இருக்கிறார். ஜனவரி 30ல் ரிலீஸான இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் சூப்பர்ஹிட் வரவேற்பு பெற்றது.

ஹீரோயினை 25 பவுன் நகை போட்டு கல்யாணம் பண்ணிக்கொடுக்க வேண்டும் என மாப்பிள்ளை வீட்டில் கேட்க பெண் வீட்டினர் சம்மதிக்கின்றனர். ஆனால் அதற்கு அவர்கள் ஒரு ஜுவல்லரியில் போய் வரக்கூடிய மொய் பணத்தை வச்சி நகைக்கான பணத்தை கொடுத்துட்றோம்னு அக்ரீமெண்ட் போட்டு விடுகின்றனர்.



ஆனால் அவர்கள் எதிர்பார்த்த அளவு காசு வராமல் போக நகைக்கடையில் இருந்து 12 பவுனை திருப்பி கேட்க பெண் வீட்டில் தர மறுக்குறாங்க. இதன் பின்னர் அந்த நகைய வாங்க புரோக்கர் என்னென்ன பண்றாருங்றதுதான் மொத்த படத்தின் கதையுமே.

நகையை திரும்பி வாங்கி கொடுக்க வரும் நகை புரோக்கராக பேசில் ஜோசப் நடித்திருக்கிறார். இந்த கேரக்டரா என யோசிக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக ஹீரோவின் பில்டப் தந்து ஆச்சரியப்படுத்துகின்றனர். அமைதியாக இருக்கும் லிஜோமோல் கேரக்டரும் அழகாக வலு கொடுத்து இருக்கின்றனர்.

இதுவரை பலரும் யோசிக்காத ஒரு கதை. அதை திரைக்கதையிலும் சரியாக கையாண்டு இருக்கின்றனர். ஆனால் படம் ரொம்ப சிம்பிள் என்பதால் கிளைமேக்ஸில் என்னென்ன நடக்கும் என்பதை எளிதாக யோசித்து விட முடிகிறது.

பரபரப்பாக செல்லும் படத்தின் கடைசி 20 நிமிடங்கள் மட்டுமே டல் அடிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் எந்த அடல்ட் விஷயமும் இல்லாமல் குடும்பத்துடன் பார்க்க ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள இப்படத்தினை ஜியோ ஹாட்ஸ்டாரில் பார்த்து எஞ்சாய் பண்ணுங்க.! மிஸ் பண்ணாதீங்க!

Next Story