மாமன் படம் பார்க்கப் போறீங்களா... கர்சீப்பை மறந்துடாதீங்க...! கதற விட்டுட்டாங்க!

By :  SANKARAN
Update: 2025-05-16 11:55 GMT

சூரி ஹீரோவாக நடித்து இன்று வெளியான படம் மாமன். கருடன் படத்தைத் தொடர்ந்து வந்துள்ளதால் சூரியின் இந்தப் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு. விலங்கு வெப் சீரிஸை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ள படம். படத்தின் கதையை எழுதியவர் சூரி. கே. குமார் தயாரித்துள்ளார். படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி ஹீரோயினாக நடித்துள்ளார்.

ராஜ்கிரண், பாலசரவணன், சுவாசிகா, யோகிபாபு, பால சரவணன், பாபா பாஸ்கர், பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன், விடிவி கணேஷ், உன்னி முகுந்தன், விஜி சந்திரசேகர் உள்பட பலர் நடித்துள்ளனர். ஹேஷம் அப்துல் வஹாப் இசை அமைத்துள்ளார். பாடல்கள் பெரிதாகக் கவரவில்லை. தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் விமரசனம் குறித்து மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு என்ன சொல்றாருன்னு பாருங்க.

இது ஒரு சென்டிமென்ட் படம். தாய்மாமன் மேல் ஒரு பையனுக்கு மிகுந்த அன்பு. மாமனும் அப்படி பார்த்துக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் சூரிக்கு திருமணம் ஆகி மாமனும், அந்தப் பையனும் பிரிய நேரிடுகிறது. அப்புறம் என்ன ஆனதுங்கறதுதான் கதை. படத்துல பர்ஸ்ட் ஆஃப் ரொம்ப எமோஷனலா இருக்கு. படத்துக்கு ஓவர் டோஸா எது இருந்தாலும் ஒரு கட்டத்தில் போரடித்து விடும்.

மாமனுக்கும், மருமகனுக்குமான பாசமலர் தான் இது. செகண்ட் ஆஃப் முழுக்க டிவி சீரியல் பார்த்த மாதிரி இருக்கு. படம் பார்க்குறவங்க கண்டிப்பா கர்சீப், டவல் எடுத்துட்டுப் போங்க. பிழிய பிழிய கண்ணீர் வரும். சூரி மீண்டும் பிரமாதமாக படத்தில் நடித்துள்ளார். நடிப்பு மட்டும் போதுமா என்றால் இன்னும் படத்தை சுவாரசியமாகக் கொடுத்துருக்கலாம் என்றே தோன்றுகிறது.


உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி படங்களில் கிளைக்கதைகள் இருக்கும். அதுமாதிரி இந்தப் படத்திலும் வைத்திருக்கலாம். இந்தப் படத்தில் ஒரு கட்டத்துக்கு மேல் சலிப்பு வந்துவிடுகிறது.

ஆடியன்ஸைப் பொருத்தவரை வெளிய இருக்குற வாழ்க்கையே பெரிய போராட்டக்களம். அவனே ஒரு ரெண்டு மணி நேரம் ஜாலியா இருக்கலாம்னுதான் தியேட்டருக்கு வர்றான். படத்துல கதை இழு இழுன்னு இழுத்துட்டே போறாங்க. திரைக்கதை ரொம்ப பலவீனமா இருக்கு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News