Thalaivan thalaivi: புரோட்டா மாஸ்டர் தலைவன்னா சும்மாவா? தலைவியும் வரிஞ்சிக் கட்டிருக்காரே!
விஜய்சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் தலைவன், தலைவி படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. எப்படி இருக்குன்னு பார்க்கலாமா...
விஜய் சேதுபதியும், நித்யா மேனனும் போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளனர். அதனால்தானோ படத்திற்குப் பெயரே தலைவன் தலைவின்னு வைத்துள்ளனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. கிராமத்துக்கே உரிய கம்பீரம், தெனாவெட்டுன்னு புரோட்டா கடையில் மாஸ்டராக சும்மா பிச்சு உதறுகிறார் விஜய் சேதுபதி. கொத்து புரோட்டோ போடும் போது ஆடும் டான்ஸ்சே நம்மை படத்தைப் பார்த்து விட வேண்டும் என்ற தூண்டி விடுகிறது.
நெற்றி நிறைய விபூதி பூசியும், நித்யா மேனனுடன் ரொமான்ஸ் செய்யும்போதும் வழக்கமான விஜய் சேதுபதி தெரிகிறார். நித்யா மேனன் கிராமத்துப் பெண்ணுக்கே உரிய லட்சணத்துடன் வந்து மனதை கொள்ளை கொள்கிறார். பாத்திரம் கழுவும்போதும் சரி. எங்களை பிரிச்சி விட்டுருங்கன்னு சொல்லும்போதும் மனதில் நிறைந்து விடுகிறார்.
டிரெய்லரில் முடிஞ்ச அளவுக்கு எதை எல்லாம் தர முடியுமோ அதை எல்லாம் தந்து அசத்தியுள்ளார் இயக்குனர் பாண்டிராஜ். விஜய்சேதுபதியையும், நித்யா மேனனையும் தவிர இந்தக் கேரக்டர்களில் யார் நடித்தாலும் பொருந்தாது என்று சொல்லி இருந்தார் பாண்டிராஜ். அதைப் படம் பார்க்கும்போதுதான் தெரிகிறது.
வரும் 25ம் தேதி திரைக்கு வரும் தலைவன், தலைவி டிரைலர் விட்டதில் இருந்தே எதிர்பார்ப்பைத் தூண்டிவிட்டது. சந்தோஷ் நாராயணன் இசை சந்தோஷத்தை அள்ளித் தருகிறது. யதார்த்தமான டயலாக்கை பேசும் மக்கள் செல்வனுக்கு இந்தப் படம் இன்னொரு மணிமகுடம்தான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
அவ பேரு அரசின்னு ஒரு டயலாக் வருது. எனக்குப் பேரரசி தான் அவ அத்தைன்னு விஜய்சேதுபதி சொல்கிறார். ஆகாச வீரன், பொற்செல்வன், ஆவர்த்தனன்னு சுத்தமான தமிழ்ப்பெயர்கள் படத்தில் பயன்படுத்தப்பட்டு இருப்பது புதுமை. மதுரை யா.ஒத்தக்கடை யானை மலையின் அழகை ரம்மியமாக படம்பிடித்துள்ளது கேமரா. படத்தின் டிரைலரே படத்துக்குப் பெரும் ரசிகர்கூட்டத்தை சேர்க்கும் என்பது திண்ணம்.
தலைவன் தலைவி டிரைலரைக் காண: https://www.youtube.com/watch?v=nyURE5vmj2I