விஜய்க்காக இத செஞ்ச நீங்க..! அத ஏன் மிஸ் பண்ணீங்க..! எஸ்.ஏ.சந்திரசேகரை சீண்டிய பத்திரிக்கையாளர்..
Vijay SA Chandrasekhar: தமிழ் சினிமாவின் மாஸ் ஹிட் நாயகன் விஜய் இன்று பெரிய இடத்தில் இருந்தாலும் ஒரு கட்டத்தில் அவரும் தடுமாறி கொண்டு இருந்தார். அவருக்கு துணையாக இருந்தவர் பிரபல இயக்குனரும், அவர் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர். அவர் செய்த ஒரு விஷயத்தினை பத்திரிக்கையாளர் பிஸ்மி சொல்லி இருக்கிறார்.
அண்ணாமலை படத்தின் காட்சியை நடித்து காட்டிய விஜய் நடிக்க ஆசைப்படுவதாக தந்தையிடம் கூறி இருக்கிறார். அவரோ முதலில் சம்மதிக்கவே இல்லையாம். பின்னர் மனைவியும் ரொம்பவே கேட்ட பின்னரே அவரை நடிக்க வைக்க ஒப்புக்கொள்கிறார்.
இதையும் படிங்க: டாக்டர் ஓகே சொன்ன பிறகு ஷூட்டிங் வந்த நடிகர்!.. தயாரிப்பாளர் எம்.ஜி.ஆரின் நல்ல மனசு!..
இந்த சமயத்தில் பிரபல இயக்குனராக கோலிவுட்டில் வலம் வந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். தன் மகனுக்காக பலரிடத்திலும் வாய்ப்பு கேட்டு நின்று இருக்கிறார். முதல் படம் விஜயிற்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட அவரை கொச்சைப்படுத்திய சம்பவங்களும் நடந்ததாம்.
இதை அவர் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் எப்படி கையாண்டார் என்பதை பிரபல திரை விமர்சகர் பிஸ்மி தெரிவித்துள்ளார். அவர் அளித்திருக்கும் பேட்டியில் இருந்து, பெரும்பாலான திரை பிரபலங்கள் தங்களை பத்திரிக்கையாளர்கள் பாராட்டி எழுதினால் எந்த விதத்திலும் நன்றி சொல்லவோ அதை குறித்து பேசவோ கூட மாட்டார்கள்.
இதையும் படிங்க: இதனால் தான் கலாபவன் மணி இறந்தார்.. 6 வருடத்துக்கு பின்னர் வெளியான ஷாக் தகவல்..!
ஆனால் திட்டி எழுதிவிட்டால் சண்டைக்கு வந்துவிடுவார்கள். அதுபோல விஜயின் ஆரம்ப காலத்தில் ஒரு பத்திரிக்கை விஜயை மோசமாக விமர்சித்து விட்டது. அதனால் கடுப்பான எஸ்.ஏ.சி தனக்கு தெரிந்த பிரபலங்களை ஒன்று சேர்ந்து அந்த பத்திரிக்கையை முற்றுகையிட்டாராம். சண்டை போட்டு மன்னிப்பு கூட கேட்க வைத்து விட்டாராம். ஆனால் விஜயை வைத்து கொண்டாடிய பத்திரிக்கைகளை கொஞ்சமும் கண்டுக்கொள்ளவே இல்லை என்பதை குறிப்பிட்டு இருக்கிறார்.