300 கோடி கோட் வசூலா? அதெல்லாம் ஐஸ் வைக்கிற வேலை… ஷாக் கொடுத்த எஸ்.ஏ.சி !

by Akhilan |   ( Updated:2024-09-10 12:37:40  )
300 கோடி கோட் வசூலா? அதெல்லாம் ஐஸ் வைக்கிற வேலை… ஷாக் கொடுத்த எஸ்.ஏ.சி !
X

Goat

SAC: விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் கோட் திரைப்படத்தின் வசூல் ஐந்து நாட்களில் 300 கோடியை நெருங்கி விட்டதாக தயாரிப்பு நிறுவனமே தெரிவித்து இருக்கும் நிலையில் அது ஐஸ் வைக்கும் வேலை என எஸ் ஏ சந்திரசேகர் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர் யார் என்ற அடையாளம் அவர்கள் படங்களின் வசூலை வைத்து தான் குறிப்பிடப்படுகிறது. இதனால் ஒவ்வொரு நடிகரின் திரைப்படம் வெளியானதும் அப்படத்தின் வசூல் குறித்த தகவல்களை தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: மாநாட்டிற்கு வந்த சிக்கல்! எப்படிப் போனாலும் முட்டுதே.. சிக்கலில் விஜய்

இதனால் முன்பு போல ரசிகர்களும் தங்களுடைய கணக்கை தெளிவாக திட்டம் வைத்து கணக்கிட்டு தயாரிப்பாளர் குழு சொல்வது சரியா இல்லை பொய்யா என்பதையும் கண்டுபிடித்து விடுகின்றனர். அந்த வகையில் விஜயின் லியோ படத்தில் இருந்து இந்த வகையான திட்டமிடல் தொடர்ந்து நடந்து வருகிறது.

கடந்த வருடம் தொடங்கிய பஞ்சாயத்தில் இருந்து ஜெயிலர் திரைப்படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருந்தது. அதைத்தொடர்ந்து வெளியான விஜயின் லியோ திரைப்படம் 600 கோடியை தாண்டியதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. இது ரசிகர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியது.

தொடர்ச்சியாக தற்போது வெளியாகியிருக்கும் கோட் திரைப்படத்தின் நான்கு நாள் வசூல் 288 கோடி என அர்ச்சனா கல்பாத்தி தன்னுடைய எக்ஸ் கணக்கில் பதிவிட்டு இருக்கிறார். இதுகுறித்து ரசிகர்களும் நிறைய டேட்டாக்களை வெளியிட்டு ஏஜிஎஸ்சை கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தீபாவளி வேணாம்… இந்த வைரலயே ஹிட்டடிச்சிரலாம்… ஜெயம்ரவியின் பிரதர் ரிலீஸ் தேதி இதானாம்!

இந்நிலையில் விஜயின் தந்தையும், பிரபல இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரிடம் ஒரு பேட்டியில் தயாரிப்பு நிறுவனம் கோடிக்கணக்கில் தற்போது படங்களின் வசூல் விவரங்களை வெளியிடுவதை எப்படி பார்க்கிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்தவர் அதெல்லாம் ஐஸ் வைக்கிற வேலை.

நாளை அடுத்த படத்துக்கு கால்ஷூட் கிடைக்காது என்பதால் சொல்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் ஹீரோக்களின் ரசிகராகி விடுவதே இதுபோல நடப்பதற்கு காரணம் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: மனசிலாயோ பாடலை ரியலாக பாடியது இந்த பிரபலம் தானா? ரஜினியின் ஆசையால் நடந்த மேஜிக்

Next Story