பிக்பாஸாக பேசுபவருக்கு இவ்வளவு சம்பளமா?..... குரலுக்கு கொட்டுது காசு!...
தமிழ் பிக்பாஸை பொறுத்தவரை இதுவரை 5 சீசன்கள் முடிந்துவிட்டது. 5 சீசனையும் கமல்ஹாசனே நடத்த்தியுள்ளார். தற்போது பிக்பாஸ் அல்ட்டிமேன் என்கிற புதிய நிகழ்ச்சி துவங்கவுள்ளது. இது ஹாட் ஸ்டார் ஆப்பில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகவுள்ளது. பிக்பாஸ் வீட்டில் பிக்பாஸாகா பேசுபவரின் குரல்தான் பிரதானம். காந்த மற்றும் கணீர் குரலில் அவர் என்ன சொல்கிறாரோ அதை பிக்பாஸ் போட்டியாளர்கள் செய்ய வேண்டும். 100 நாட்கள் அந்த குரலை கேட்டு மட்டுமே போட்டியாளர்கள் விளையாடுகிறார்கள். எனவே, அவர்களோடு ஒட்டிய […]
தமிழ் பிக்பாஸை பொறுத்தவரை இதுவரை 5 சீசன்கள் முடிந்துவிட்டது. 5 சீசனையும் கமல்ஹாசனே நடத்த்தியுள்ளார். தற்போது பிக்பாஸ் அல்ட்டிமேன் என்கிற புதிய நிகழ்ச்சி துவங்கவுள்ளது. இது ஹாட் ஸ்டார் ஆப்பில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகவுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் பிக்பாஸாகா பேசுபவரின் குரல்தான் பிரதானம். காந்த மற்றும் கணீர் குரலில் அவர் என்ன சொல்கிறாரோ அதை பிக்பாஸ் போட்டியாளர்கள் செய்ய வேண்டும். 100 நாட்கள் அந்த குரலை கேட்டு மட்டுமே போட்டியாளர்கள் விளையாடுகிறார்கள். எனவே, அவர்களோடு ஒட்டிய உறவாகவே அந்த குரல் மாறிப்போகிறது.
அதனால்தான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போது ‘பிக்பாஸ் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன்’ என போட்டியாளர்கள் உருகுகிறார்கள்.
சாஷோ சட்டிஸ் என்பவர்தான் இந்த குரலுக்கு சொந்தக்காரர். கடந்த 5 சீசன்களிலும் பிக்பாஸாக ஒலித்தது இவரின் குரல்தான். இனிமேலும் அவர்தான் பேசுவார்.
இவர் ஒரு மாதத்திற்கு ரூ.5 லட்சம் சம்பளம் பெறுகிறாராம். ஒவ்வொரு பிக்பாஸ் சீசனும் குறந்தது 3 மாதங்களுக்கு மேல் நடக்கிறது. எனவே, பதினேழரை லட்சத்தை அவர் சம்பளமாக பெறுகிறார். இதுவரை 5 சீசன் முடிந்துள்ளதால் குரலை வைத்தே 88 லட்சம் கல்லா கட்டிவிட்டார் சாஷோ.