இவ்ளோ இறக்கம் காட்ட தலைவியால தான் முடியும்!.. சமந்தாவின் லேட்டஸ்ட் பிக்ஸ் வந்துருக்கு ஓடியாங்க!..

by Saranya M |   ( Updated:2024-05-31 14:22:27  )
இவ்ளோ இறக்கம் காட்ட தலைவியால தான் முடியும்!.. சமந்தாவின் லேட்டஸ்ட் பிக்ஸ் வந்துருக்கு ஓடியாங்க!..
X

நடிகை சமந்தா தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வரும் நிலையில், ரசிகர்கள் அதிக அளவில் சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்ந்து வருகின்றனர். மேலும், ரசிகர்களை அதிகரித்து இன்ஸ்டாகிராம் மூலமாக வருமானம் ஈட்டும் முயற்சியில் நடிகை சமந்தா ஈடுபட்டு வருகிறார்.

அதற்காக தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அதிகப்படியான லைக்குகளையும் பார்வைகளையும் அள்ளி வருகிறார். அதிரடியாக 35 மில்லியன் ரசிகர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொண்டுள்ள சமந்தா தற்போது மெரூன் கலர் கவர்ச்சி உடையை அணிந்து கொண்டு வெளியிட்ட புகைப்படங்களை வைரலாக்கி வருகிறார்.

இதையும் படிங்க: நாகேஷ் பண்ணிய சேட்டை… ஜெய்சங்கர், லட்சுமிக்கு இடையில் இப்படியா செஞ்சாரு?

நடிகை சமந்தா சென்னையில் பிறந்து வளர்ந்த நிலையில், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஹீரோயினாக நடித்த அறிமுகமானார். தமிழில் அதர்வாவுக்கு ஜோடியாக பானா காத்தாடி படத்தில் நடித்த சமந்தா அதன் பின்னர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.

சூர்யாவுடன் 24, அஞ்சான் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தளபதி விஜய்யுடன் கத்தி, மெர்சல் உள்ளிட்ட படங்களில் சமந்தா நடித்த நிலையில், கடைசியாக தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: நீங்க எதிர்பார்க்குறது கண்டிப்பா இருக்காது! விஜய்க்கு அதுதான் ஹைப்பே.. அது இல்லாட்டி எப்படி?

நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா நான்கு ஆண்டுகள் அவருடன் காதல் வாழ்க்கை நடத்தி வந்த நிலையில் குழந்தை ஏதும் பெற்றுக் கொள்ளாமல் இருந்தார். அதன் பின்னர் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக நாக சைதன்யா மற்றும் சமந்தா விவாகரத்து பெற்று பிரிந்தனர். சமந்தாவுக்கு 250 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்க நாக சைதன்யா முடிவு செய்த நிலையில் அதை வேண்டாம் என்று தூக்கி எறிந்துவிட்டு தனது சொந்த காலில் நிற்க ஆரம்பித்தார்.

சமந்தா நடிப்பில் விரைவில் சிட்டாடல் வெப் சீரிஸ் அமேசான் பிரைமில் வெளியாக காத்திருக்கிறது. மேலும், பங்காரம் எனும் படத்தில் அவர் நடிக்க உள்ளார். கடந்த ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான குஷி திரைப்படமும் சமந்தாவுக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.

இதையும் படிங்க: எம்ஆர்.ராதா துப்பாக்கி வாங்கினதே எம்ஜிஆரை சுட இல்லை… அந்த டார்கட்டே வேறயாம்…! ராதாரவி சொன்ன ரகசியம்

Next Story