சரோஜாதேவிக்கு எமனாக வந்த எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா ஜோடி!.. எல்லா வாய்ப்பும் போச்சி!...
நல்ல உயரம், மாநிறம் பார்ப்பதற்கு மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் வகையில் அமைந்த உடல்வாகு. எல்லோரிடமும் இனிமையாக பழகக்கூடிய குணம் நிறைந்த சரோஜாதேவி தான் நடித்த திரைப்படங்களில் தன்னுடைய அற்புதமான நடிப்பு திறனை வெளிப்படுத்து இருப்பார். தென்னிந்திய மொழிகளில் நடித்த இவர் தமிழிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
மேலும் இவர் மிக பிரபலமான நடிகை வைஜெயந்தி மாலாவின் சாயலை கொண்டிருந்தார் சரோஜாதேவி. எனவே இந்த கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவியை கருப்பு வைஜெயந்தி மாலா என்று அன்போடு அழைத்தார்கள்.
எம்ஜிஆர், சிவாஜி கணேசன் என முன்னணி நடிகர்கள் பலரோடு தென்னிந்திய சினிமாவில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் சரோஜாதேவி இவரது குரலால் பல ரசிகர்கள் ஈர்க்கப்பட்டார்கள் என்று தான் கூற வேண்டும் குழந்தைத்தனமான இவரது நடிப்பு பலராலும் விரும்பப்பட்டது.
ஹிட் பாடல்களுக்கு சொந்தக்காரி என்று கூறலாம் அந்த அளவுக்கு இவர் பாடல்கள் பட்டிக்கட்டி எங்கும் சிட்டு அடித்து இன்று வரை பரவலாக கேட்கப்படக்கூடிய பாடல்களின் வரிசையில் உள்ளது அதற்கு உதாரணமாக தொட்டால் பூ மலரும் என்ற பாடலை கூறலாம்.
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்த பிறகு சரோஜாதேவியின் மார்க்கெட் சரிய தொடங்கியது என்று கூறலாம் ஏற்கனவே அவர் நடித்த படங்களில் எந்தவிதமான கவர்ச்சியையும் காட்டாமல் குடும்ப பாங்கான வேடங்களிலும் மற்ற படங்களிலும் விரசமில்லாமல் நடித்தவர் சரோஜாதேவி.
அடுத்து திரைக்கு வந்த புதிய நடிகைகள் அனைவரும் கவர்சிக்கு பஞ்சமில்லாமல் அதீத கவர்ச்சியோடு நடித்த காரணத்தாலும் தொடர்ந்து எம்ஜிஆர் சிவாஜி ஜெமினி கணேசன் ஒரு நடித்த இவரைப் பார்த்து போர் அடித்து விட்டதின் காரணத்தால் இவரது மார்க்கெட் விழுந்தது.
மேலும் வெண்ணிறாடை நிர்மலா மற்றும் ஜெயலலிதாவின் கவர்ச்சி பங்களிப்பு திரை உலகில் நடிகை சரோஜாதேவிக்கு மாபெரும் பின்னடைவை தந்தது. பொறுத்த வரை நடிகைகள் நடிப்பது ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே ரசிகர்களால் ஆராதிக்கப்படக்கூடிய ஒரு கோல்டன் பீரியட் என்று கூறலாம்.
அந்த வகையில் தனக்கு என்று ஓர் இடத்தை தக்க வைத்துக் கொண்ட சரோஜாதேவி புதுமுக நடிகைகளின் படை எடுப்பு காரணமாகவும் புது படங்களில் தன்னை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போனது.