தியேட்டரில் சத்யராஜிக்கு வந்த திடீர் மரியாதை... யப்பா மனுஷன் என்னம்மா சமாளிக்கிறாரு...!

தமிழ்த்திரை உலகின் புரட்சித்தமிழன் என்று போற்றப்படுபவர் சத்யராஜ். ஆரம்ப காலகட்டங்களில் இவருக்கு உங்கள் சத்யராஜ் என்று டைட்டில் போடுவாங்க. அப்புறம் வளர்ந்து வரும் காலகட்டங்களில் புரட்சித்தமிழன் ஆகி விட்டார். காரணம் அவருக்கு என்று தனித்திறமை, ஸ்டைல் தான். இன்று வரை பிசியான நடிகராக வலம் வருகிறார். இன்று இவர் நடித்த வெப்பன் படம் ரிலீஸாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. இப்போது அவர் தனது கல்லூரி கால நாட்களில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பத்தைப் பகிர்ந்துள்ளார். வாங்க என்னன்னு […]

Update: 2024-06-07 08:30 GMT

Sathyaraj

தமிழ்த்திரை உலகின் புரட்சித்தமிழன் என்று போற்றப்படுபவர் சத்யராஜ். ஆரம்ப காலகட்டங்களில் இவருக்கு உங்கள் சத்யராஜ் என்று டைட்டில் போடுவாங்க. அப்புறம் வளர்ந்து வரும் காலகட்டங்களில் புரட்சித்தமிழன் ஆகி விட்டார். காரணம் அவருக்கு என்று தனித்திறமை, ஸ்டைல் தான். இன்று வரை பிசியான நடிகராக வலம் வருகிறார்.

இன்று இவர் நடித்த வெப்பன் படம் ரிலீஸாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. இப்போது அவர் தனது கல்லூரி கால நாட்களில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பத்தைப் பகிர்ந்துள்ளார். வாங்க என்னன்னு பார்ப்போம்.

இதையும் படிங்க... இந்தியன் படத்துக்கு ஆஸ்கர் கிடைக்காததுக்கு இதுதான் காரணமாம்… இவ்ளோ நாள் தெரியாமப் போச்சே..!

நான் கோயம்புத்தூர்ல காலேஜ் எல்லாம் படிச்சிட்டு சும்மா சுத்திக்கிட்டு இருந்தேன். அந்த நேரம் பொண்ணுக்குத் தங்க மனசுன்னு ஒரு படம் வந்தது. சிவகுமார், விஜயகுமார், ஜெயசித்ரா நடிச்ச படம். அந்தப் படம் பெரிய ஹிட். கோவைல சிவசத்யான்னு ஒரு தியேட்டர்.

அங்கே படம் பார்க்கப் போயிட்டு இன்டர்வெல்ல காபி சாப்பிட்டுட்டு 'தம்' அடிப்போம். திடீர்னு ஒரு நாலு பேரு வந்து 'சார் நீங்க தானே பொண்ணுக்குத் தங்க மனசு படத்துல கலெக்டரா நடிக்கிறீங்க...'ன்னு கேட்டாங்க. அப்படின்ன உடனே 'றெக்கைக் கட்டிப் பறக்குதடா அண்ணாமலை சைக்கிள்...'ன மாதிரி ஆயிடுச்சு. 'அடே... என்னைப் பார்த்தா சினிமா ஆக்டர் மாதிரி இருக்குதா?'

அப்படின்னு யோசிக்கிறதுக்குள்ள என் கூட இருக்குற ப்ரண்டு ஒருத்தன் என்னை ஓட்டுறதுக்காகவே 'ஆமா'ன்னுட்டான். படம் முடிஞ்சி வரைல நம்மள சுத்தி ஒரு 10 பேரு. நாமளும் அமுக்கி வாசிச்சிட்டோம். இப்ப என்னடா வீட்டுக்கு சைக்கிள்ல தான போகணும். என்ன பண்றது? அதுக்காக இங்கயேவா இருக்க முடியும்னு சைக்கிளை எடுக்கப் போனேன்.

இதையும் படிங்க... ’ஹரா’வா இதுக்கு விஜய்யோட ‘சுறா’வே தேவலாம்!.. முடிச்சிவிட்டாய்ங்க!.. மோகன் பட விமர்சனம் இதோ!..

அப்போ நண்பன் கேட்டான். 'சினிமா நடிகர் சைக்கிள்ல எல்லாம் போலாமா..'ன்னு கேட்டான். 'அதுக்காக வீட்டுக்குப் போகாம தியேட்டர்லயேவா இருக்க முடியும்..'னு சொன்னேன். 'சார் என்ன சார் சைக்கிள்..'னு சொன்னாங்க. 'அவன் சும்மா அடிச்சி விட்டாங்க. நான் இல்லங்க. நான் கோயம்புத்தூர்ல இருக்கேன். அது அவரு பேரு வந்து சிவகுமார். ' னு சொல்லி தப்பிக்க வேண்டியதா போச்சு. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News