சாவித்ரியின் நிலையை பார்த்து கலங்கிவிட்டேன்!.. ஜெமினியை காதலித்திருக்கவே கூடாது!.. சொன்னது யார் தெரியுமா?..

Gemini Savithri: தமிழ் சினிமாவில் 60களின் காதல் ஜோடி என்றால் அது ஜெமினி கணேசனும், சாவித்ரியும் தான். ஆனால் அவர்கள் காதல் புகழப்பட்ட அதே நேரத்தில் நிறைய சர்ச்சைகளையும் சந்தித்தது. அப்படி ஒரு அதிர்ச்சி தகவலை நடிகர் ராஜேஷ் தெரிவித்து இருக்கிறார். ஜெமினி கணேசன் திருமணம் ஆன பின்னர் சினிமாவில் தன்னுடன் நடித்த சாவித்ரியுடன் காதல் வயப்பட்டார். இருவரும் இணைந்து வாழ துவங்கினர். இதனால் வெற்றி நாயகியாக இருந்த சாவித்ரியின் கேரியரே தொலைந்தது. ஒரு கட்டத்தில் ரொம்பவே […]

By :  Akhilan
Update: 2023-11-12 07:00 GMT

Gemini Savithri: தமிழ் சினிமாவில் 60களின் காதல் ஜோடி என்றால் அது ஜெமினி கணேசனும், சாவித்ரியும் தான். ஆனால் அவர்கள் காதல் புகழப்பட்ட அதே நேரத்தில் நிறைய சர்ச்சைகளையும் சந்தித்தது. அப்படி ஒரு அதிர்ச்சி தகவலை நடிகர் ராஜேஷ் தெரிவித்து இருக்கிறார்.

ஜெமினி கணேசன் திருமணம் ஆன பின்னர் சினிமாவில் தன்னுடன் நடித்த சாவித்ரியுடன் காதல் வயப்பட்டார். இருவரும் இணைந்து வாழ துவங்கினர். இதனால் வெற்றி நாயகியாக இருந்த சாவித்ரியின் கேரியரே தொலைந்தது. ஒரு கட்டத்தில் ரொம்பவே குண்டாகி அழகையும் கெடுத்து கொண்டார்.

இதையும் படிங்க: புருஷனுக்கு போட்டியா பொண்டாட்டியா… அதுவும் அப்பா சப்போர்ட்டுல.. என்னம்மா ஐஸ்வர்யா நியாயமா..?

இதையெல்லாம் நடிகையர் திலகம் படத்திலே பெரும்பாலான தகவல்கள் சொல்லப்பட்டு இருக்கும். இதனை ஜெமினி குடும்பம் மறுத்தால் கூட சாவித்ரியின் கேரியர் காலியான சம்பவம் அனைவருக்குமே தெரிந்த கதை தான். உச்சத்தில் இருந்தவர் தரைமட்டம் ஆன கதையை நடிகர் ராஜேஷ் தெரிவித்து இருக்கிறார்.

அவர் அளித்த பேட்டியில் இருந்து, அந்த ஏழு நாட்கள் படப்பிடிப்பு நடந்த போது அருகில் சாவித்ரி அம்மாவின் வீடு இருந்தது. அவரை பார்க்கலாம் எனப் போனேன். வீட்டின் வேலைக்கார பெண் ஜெமினிக்கு கூப்பிட்டு எதுவோ சொன்னார்.

அவர் என்னை அனுமதிக்க சொன்னார். சாவித்ரியின் மகன் 10 அல்லது 13 வயது இருக்கும் என்னை சோகத்துடன் பார்த்து கொண்டு நின்றான். என் வாழ்வில் நான் அனுபவித்த துயரமான நாள் அது தான். அதை என்னால் சொல்லவும் முடியாது. சொல்லவும் கூடாது.

இதையும் படிங்க: ஒரு பாட்டுக்கு 20 நாட்கள் அலையவிட்ட கண்ணதாசன்… கடுப்பான பி.எஸ்.வீரப்பா.. கடைசியில் செம ட்விஸ்ட்டு..!

ஒரு கோடி காசு கொடுத்து சாவித்ரியை கண்டுபிடிக்க சொன்னால் கூட ஒருத்தராலும் கண்டுபிடிக்கவே முடியாது. அவர் ஜெமினியை காதலித்து இருக்கவே கூடாது. தன்னுடைய மொத்த பணத்தினை இழந்த பின்னர் கூட காரை கொடுத்து ட்ரைவரை பிழைத்து கொள்ள சொன்ன சாவித்ரிக்கா இந்த நிலைமை எனக் கண் கலங்கினேன் எனக் குறிப்பிட்டார்.

Tags:    

Similar News