தடைகளை தாண்டி வந்து தமன்னாவை தொட்ட ரசிகர்!.. அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?..

சினிமா பிரபலங்களை பார்த்ததும் ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு அவர்களை எப்படியாவது தொட்டுப் பார்த்து விட வேண்டும் என அத்துமீறுவது உலகளவில் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. அதிலும், நடிகைகளை பார்த்து விட்டால் இளைஞர்களின் ஹார்மோன் அதிக வேகமாக வேலை செய்வது இயல்புதான். இது இப்படி இருக்க ஜெயிலர் படத்தின் காவாலா பாட்டுக்கு அப்படியொரு ஆட்டம் போட்ட நடிகை தமன்னாவை பார்த்தால் ரசிகர்கள் சும்மா விடுவார்களா என்ன, அப்படியொரு சம்பவம் தான் இன்று கேரளாவில் நடைபெற்றுள்ளது. பட்டுச்சேலையில் பளிங்கு சிலை […]

By :  Saranya M
Update: 2023-08-07 09:50 GMT

சினிமா பிரபலங்களை பார்த்ததும் ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு அவர்களை எப்படியாவது தொட்டுப் பார்த்து விட வேண்டும் என அத்துமீறுவது உலகளவில் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.

அதிலும், நடிகைகளை பார்த்து விட்டால் இளைஞர்களின் ஹார்மோன் அதிக வேகமாக வேலை செய்வது இயல்புதான். இது இப்படி இருக்க ஜெயிலர் படத்தின் காவாலா பாட்டுக்கு அப்படியொரு ஆட்டம் போட்ட நடிகை தமன்னாவை பார்த்தால் ரசிகர்கள் சும்மா விடுவார்களா என்ன, அப்படியொரு சம்பவம் தான் இன்று கேரளாவில் நடைபெற்றுள்ளது.

பட்டுச்சேலையில் பளிங்கு சிலை தமன்னா:

கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள நடிகை தமன்னா பச்சை நிற பட்டுப்புடவை மற்றும் பிங்க் நிற ஜாக்கெட்டும் அணிந்து கழுத்து நிறைய தங்க நகைகளையும் அணிந்து கொண்டு ஜவுளிக்கடை பொம்மை போல நடந்து வந்ததை பார்த்த இளம் ரசிகர்கள், பாடிகார்டுகள் போட்டு வைத்திருந்த பேரிகார்டு காவலை எல்லாம் மீறி நொடிப் பொழுதில் உள்ளே புகுந்து நடிகை தமன்னாவின் கையையே தொட்டு விட்டார்.

அந்த இடத்தில் தமன்னாவுக்கு பதில் வேறு எந்த நடிகையாவது இருந்தால், நடந்திருப்பதே வேறு.. ஆனால், நடிகை தமன்னா ரொம்பவே கூலாக எந்தவொரு பயமும் இன்றி அந்த ரசிகருக்கு சிரித்துக் கொண்டே ஹேண்ட்ஷேக் செய்தார்.

அத்துமீறிய இளைஞருக்கு அடித்த ஜாக்பாட்:

ஆனால், உடனடியாக தமன்னாவின் பாதுகாவலர்கள் அந்த இளைஞரை பிடித்து அடித்து வெளுக்க முடிவு செய்து அவரை பிடித்து இழுக்க, நடிகை தமன்னா, அந்த ரசிகரை ஒன்றும் பண்ண வேண்டாம் என சொல்லி விட்டு அவருடன் செம கூலாக செல்ஃபி எடுத்துக் கொண்ட வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

தடைகளை தாண்டி வந்து தமன்னாவை தொட்டு கைகுலுக்கிய ரசிகருக்கு தமன்னாவுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளும் சந்தர்ப்பமும் கிடைத்த நிலையில், தலைகால் புரியாத சந்தோஷத்தில் திளைத்து விட்டார். ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2, ஜெயிலர் அடுத்து போலா சங்கர் என இந்த ஆண்டு அடுத்தடுத்து பெரிய படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் நடித்து மிரட்டி வரும் தமன்னா அத்துமீறிய ரசிகருக்கும் அன்புக்காட்டியதை பார்த்து ரசிகர்கள் பலரும் தமன்னாவை பாராட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News