ஐயோ அப்படி மட்டும் சிரிக்காத!.. ஹார்ட்டு வீக்கு!.. சிம்பு பட நடிகையை பாத்து மயங்கும் ரசிகர்கள்..
மும்பையில் வசித்து வருபவர் சித்தி இட்னானி. தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். நாடக கம்பெனியில் முறையாக நடிப்பு பயிற்சி எடுத்தவர் இவர். அதன்பின் மாடலிங் துறையிலும் ஆர்வம் ஏற்பட அதில் இறங்கினார்.
சில அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார். முதலில் இவர் நடித்தது ஒரு குஜராத்தி மொழி திரைப்படத்தில்தான். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். சில படங்களில் நடித்தார். கவுதம் மேனன் கண்ணில் படவே சிம்புவை வைத்து அவர் இயக்கிய ‘வெந்து தணிந்தது காடு’ படம் மூலம் தமிழில் அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த படத்தில் மும்பையில் வசிக்கும் பெண்ணாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். சர்ச்சையை கிளப்பிய ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திலும் நடித்திருந்தார். அதன்பின் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடித்து வெளியான ‘காதட் பாஷா என்ற முத்துராமலிங்கம்’ படத்தில் நடித்தார்.
வளரும் இளம் நடிகையாக மாறியுள்ள சித்தி இட்னானி நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார். அதோடு, அவ்வப்போது அழகான உடைகளில் அழகை காட்டியும், சிரித்தால் குழி விழும் கன்னத்தை காட்டியும் தொடந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் முகத்தை க்ளோசப்பில் காட்டி சித்தி இட்னானி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.