சிம்புவுக்கு ஜோடி கீர்த்தி சுரேஷா?.. தீபிகா படுகோனா?.. கமல் தயாரிக்கும் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

by muthu |   ( Updated:2023-05-22 06:10:41  )
சிம்புவுக்கு ஜோடி கீர்த்தி சுரேஷா?.. தீபிகா படுகோனா?.. கமல் தயாரிக்கும் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!
X

சிம்பு நடிக்கும் புதிய படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தீபிகா படுகோனே & கீர்த்தி சுரேஷ் இருவரிடமும் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன ‌

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவராக கீர்த்தி சுரேஷ் உள்ளார். இவரின் பதிவுகளுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 14 மில்லியன் ரசிகர்களை பெற்று சாதனை படைத்துள்ளார். 1.4 கோடி இன்ஸ்டாகிராம் கணக்கு உடைய ரசிகர்கள் தற்போது கீர்த்தி சுரேஷை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறார்கள்.

தமிழில் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் அறிமுகமானார்.

தெலுங்கில் 'மகாநடி' என்றும் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்று வெளியான படத்திற்காக இந்திய அரசின் உயரிய விருதான தேசிய விருதை பெற்றார்.

சமீபத்தில் மரக்காயர், அண்ணாத்த,சர்காரு வாரி பட்டா, சாணிகாயிதம், வாஷி, தசரா படங்களில் நடித்து இருந்தார். கீர்த்தி சுரேஷ் தற்போது மாமன்னன், போலோ ஷங்கர், உள்ளிட்ட படங்களின் ரிலீசுக்கு காத்திருக்கிறார். சமீபத்தில் ஜெயம் ரவியுடன் நடிக்கும் சைரன் படத்தில் இணைந்துள்ளார். கீர்த்தி சுரேஷ், தற்போது ரிவால்வர் ரீட்டா என்ற புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

பிரபல தென்னிந்திய நடிகை மேனகா & சினிமா தயாரிப்பாளர் & இயக்குனர் தொழிலதிபர் சுரேஷ்குமார் ஆகியோரின் இளைய மகள் நடிகை கீர்த்தி சுரேஷ் தான் கமல் ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் கதாநாயகி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை தீபிகா படுகோனேவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 30 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதால் தீபிகா படுகோனே இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார்.

Next Story