அந்த நடிகருடன் நடிக்கவே மாட்டேன்.. அடம்பிடித்த சில்க் ஸ்மிதா.. காரணம் அதுதானாம்!

திரையுலகில் கதாநாயகியாக நடிக்காமல் போனலும் அவர்களுக்கு இணையாக ரசிகர்களிடம் பிரபலமானவர் சில்க் ஸ்மிதா மட்டுமே. 70,80 களில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர். இவர் காட்டிய கவர்ச்சியில் ரசிகர்கள் சொக்கிப்போனார்கள். போதை ஏத்தும் கண்களை கொண்ட சில்க் ஸ்மிதா அதை வைத்தே ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். பல படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். அதேபோல், பல படங்களில் சின்ன சின்ன மற்றும் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார். ரஜினி, கமல் ஆகியோரின் பல படங்களில் […]

Update: 2023-05-18 01:32 GMT

silk smitha

திரையுலகில் கதாநாயகியாக நடிக்காமல் போனலும் அவர்களுக்கு இணையாக ரசிகர்களிடம் பிரபலமானவர் சில்க் ஸ்மிதா மட்டுமே. 70,80 களில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர். இவர் காட்டிய கவர்ச்சியில் ரசிகர்கள் சொக்கிப்போனார்கள். போதை ஏத்தும் கண்களை கொண்ட சில்க் ஸ்மிதா அதை வைத்தே ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். பல படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். அதேபோல், பல படங்களில் சின்ன சின்ன மற்றும் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார்.

ரஜினி, கமல் ஆகியோரின் பல படங்களில் இவர் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இன்னும் சொல்லப்போனால் பல படங்களின் வெற்றிக்கே சில்க் ஸ்மிதா தேவைப்பட்டார். அதேநேரம், பல நடிகர்களுடன் நடித்த சில்க் ஸ்மிதா ஒரு நடிகருடன் நடிக்கவே மாட்டேன் என மறுத்தார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?. ஆனால், உண்மையில் அது நடந்தது.

அந்த நடிகர்தான் சத்தியராஜ். சத்தியராஜ் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம் ‘கனம் கோர்ட்டார் அவர்களே’. இந்த படத்தில் சத்தியராஜுடன் நீங்கள் நடிக்க வேண்டும் என அப்படத்தின் இயக்குனர் சொல்ல உடனே மறுத்த சில்க் ஸ்மிதா ‘அவருடன் நான் நடிக்க மாட்டேன். அவர் முகத்தை பாருங்கள்.. உயரத்தை பாருங்கள். அவருடனெல்லாம் நான் நடிக்க மாட்டேன்’ என சொல்லிவிட்டாராம்.

அதன்பின் சத்தியராஜின் குடும்ப பின்னணி உள்ளிட்ட பல விஷயங்களை சொல்லியே அந்த இயக்குனர் சில்க் ஸ்மிதாவை சம்மதிக்க வைத்துள்ளார். படப்பிடிப்பில் சத்தியராஜ் பேசும் விதம் எல்லாம் சில்க் ஸ்மிதாவுக்கு பிடித்துப்போக அதன்பின் பல படங்களில் அவர் சத்தியராஜுடன் நடித்தார். இதில் ‘ஜீவா’ முக்கியமான திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News