‘சிம்பு 48’ படத்தில் ஏற்பட்ட திடீர் திருப்பம்! 250 கோடியை தாங்குவாரா சிம்பு.. இதை யாரும் எதிர்பார்க்கல..

பத்து தல படத்திற்கு பிறகு அடுத்தடுத்து சிம்புவின் நடிப்பில் படங்கள் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர். அந்தப் படத்திற்கு பிறகு உடனடியாக ராஜ்கமல் நிறுவனத்துடன் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தார் சிம்பு. அந்தப் படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக இருந்தது. அதற்கான ப்ரீ புரடக்‌ஷன் பணிகள் எல்லாம் நடந்து கொண்டிருந்தன. ஆனால் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து படத்தை பற்றி எந்தவொரு அப்டேட்டும் இல்லாமல் இருந்தன. இதில் திடீரென சிம்பு மணிரத்னம் இயக்கத்தில் கமலுடன் இணைந்து […]

By :  Rohini
Update: 2024-07-19 05:24 GMT

simbu

பத்து தல படத்திற்கு பிறகு அடுத்தடுத்து சிம்புவின் நடிப்பில் படங்கள் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர். அந்தப் படத்திற்கு பிறகு உடனடியாக ராஜ்கமல் நிறுவனத்துடன் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தார் சிம்பு. அந்தப் படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக இருந்தது. அதற்கான ப்ரீ புரடக்‌ஷன் பணிகள் எல்லாம் நடந்து கொண்டிருந்தன.

ஆனால் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து படத்தை பற்றி எந்தவொரு அப்டேட்டும் இல்லாமல் இருந்தன. இதில் திடீரென சிம்பு மணிரத்னம் இயக்கத்தில் கமலுடன் இணைந்து தக் லைஃப் படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற ஒரு தகவல் வெளியானது. சரி அந்தப் படம்தான் இல்லை என்றாலும் தக் லைஃப் படத்திலாவது நடிக்கிறார் என ரசிகர்கள் தங்களை தேற்றிக் கொண்டனர்.

இந்த நிலையில் ராஜ்கமல் நிறுவனத்துடனான சிம்புவின் அந்தப் படம் அப்படியே கைவிடப் போவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. ஆரம்பத்தில் இந்தப் படம் 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப் போவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால் உண்மையிலேயே இந்தப் படத்தின் பட்ஜெட் 250 கோடி என சொல்லப்படுகிறது. இதனால் ராஜ்கமல் நிறுவனம் கொஞ்சம் யோசித்ததாகவும் கூறப்படுகிறது. அதனால் சிம்புவே ராஜ்கமல் நிறுவனத்துடன் பேசி இதை அப்படியே நிறுத்திக்கொள்ளலாம் என்று சொன்னதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்திற்காக சிம்புவுக்கு கொடுத்த அட்வான்ஸ் தொகையை தக் லைஃப் படத்தில் காம்பன்சேட் செய்து கொள்ளலாம் என்றும் பேசியிருக்கிறார்களாம். அதனால் சிம்பு 48 படத்தை பொறுத்தவரைக்கும் தயாரிப்பு நிறுவனம் தான் மாறியிருக்கிறதே தவிர படம் டிராப் ஆகவில்லை.

அதனால் இந்தப் படத்தை சிம்புவின் சொந்த நிறுவனமான ஆத்மன் சிம்பு சார்பில் தயாரிக்க போவதாகவும் சொல்லபடுகிறது. அதுவும் அதே பட்ஜெட்டில் இந்தப் படத்தை சிம்புவே தயாரிக்க போவதாக சொல்கிறார்கள். இது நாள் வரை சிம்புவின் படத்தை அவரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் தான் தயாரித்து வந்தது. ஆனால் இந்தப் படத்தை அவருக்கு சொந்தமான நிறுவனம் தயாரிக்க போகிறதாம்.

Tags:    

Similar News