சீதாராமம் பட கதையை முன்கூட்டியே சொன்ன தமிழ் திரைப்படம்... ஆச்சரியமா இருக்குல

தமிழ் சினிமாவில் சமீபத்தில் சூப்பர்ஹிட் படமான சீதாராமம் கதையை முன்கூட்டியே ஒரு திரைப்படத்தில் கூறப்பட்டு இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ராணுவ வீரராக துல்கர் சல்மான், இளவரசி நூர் ஜஹானாக மிருணாள் தாக்குர் நடிப்பில் வெளியான படம் சீதா ராமம். ராமின் மனைவி சீதா மகாலட்சுமி என்ற பெயரில் அவருக்கு கடிதம் எழுதுகிறார் மிருணாள். முகவரி இல்லாத அக்கடிதத்தினை எழுதியவரை கண்டுப்பிடிக்கிறார் துல்கர். ஒரு கட்டத்தில் காதல் வளரும் இவர்கள் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். அந்த […]

By :  Akhilan
Update: 2022-10-03 02:10 GMT

தமிழ் சினிமாவில் சமீபத்தில் சூப்பர்ஹிட் படமான சீதாராமம் கதையை முன்கூட்டியே ஒரு திரைப்படத்தில் கூறப்பட்டு இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

ராணுவ வீரராக துல்கர் சல்மான், இளவரசி நூர் ஜஹானாக மிருணாள் தாக்குர் நடிப்பில் வெளியான படம் சீதா ராமம். ராமின் மனைவி சீதா மகாலட்சுமி என்ற பெயரில் அவருக்கு கடிதம் எழுதுகிறார் மிருணாள். முகவரி இல்லாத அக்கடிதத்தினை எழுதியவரை கண்டுப்பிடிக்கிறார் துல்கர். ஒரு கட்டத்தில் காதல் வளரும் இவர்கள் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள்.

அந்த நேரத்தில், துல்கர் முக்கிய வேளையாக பாகிஸ்தானுக்குள் நுழைகிறார். அவரை அந்நாட்டு ராணுவம் சிறைபிடிக்கிறது. அவரால் நாடு திரும்ப முடியாமல் போகிறது. வெறும் சில நாட்களில் தனது காதலனை இழக்கிறார் நூர் ஜஹான். இதை தான் சொல்லி இருக்கிறது சீதா ராமம் திரைப்படம். ஆனால் இப்படத்தின் கதையை ஏற்கனவே ஒரு தமிழ் சினிமா காட்சியில் சொல்லப்பட்டு இருக்கிறது.


தமிழில் வெளியான படம் எங்கேயும் காதல். இப்படம் 2011ம் ஆண்டு திரைக்கு வந்திருந்தது. இப்படத்தின் ஒரு காட்சியில் ஹன்சிகா தனது தந்தையிடம் நூர் ஜஹான் காதல் குறித்து பேசி இருப்பார். காதலுக்காக தனது ராஜ்ஜியத்தை தூக்கி எறிந்தார் நூர் ஜஹான் என்பார். அதற்கு அவர் தந்தை ஆம், அதான் 15 நாட்களில் அவர் காதல் இல்லாமல் போகும் என பதிலளிப்பார். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Full View

Tags:    

Similar News