சூர்யாவுக்கு ஒரு சூப்பர் கதை!....அடுத்த பர்னிச்சரை உடைக்க தயாராகும் சிவா....
கார்த்தி நடித்த சிறுத்தை படம் மூலம் இயக்குனரானவர் சிவா. பூர்வீகம் ஆந்திரா. அதனால் தெலுங்கு படம் போலவே தமிழ் படங்களையும் எடுப்பார். அஜித்தை வைத்து வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் என 4 படங்களை இயக்கியவர். இதில் விவேகம் ரசிகர்களை கவரவில்லை. ஆனால், விஸ்வாசம் படம் செம ஹிட் ஆனது.
2019 பொங்கலுக்கு ரஜினி நடித்த பேட்ட படத்துக்கு போட்டியாக இப்படம் வெளியானது. இப்படம் ரசிகர்களை கவர்ந்ததால் பேட்ட படத்தின் வசூலும் பாதித்தது. எனவே, சிவாவின் இயக்கத்தில் நடிக்க முடிவெடுத்தார் ரஜினி.
இதன் காரணமாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த படம் உருவானது. இப்படத்தில் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இது ஒரு அண்ணன் - தங்கை செண்டிமெண்ட் படமாக வெளிவந்துள்ளது. ஆனால், ஓவர் செண்டிமெண்ட், அபத்தமான வசனங்கள், சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை, திருப்பாச்சி, வேதாளம், விஸ்வாசம் ஆகிய படங்கள் கலந்த கலவையாக இப்படம் வெளியானது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.
தீபாவளி அன்று அதிகாலை 4 மணி காட்சிக்கு சென்ற பல ரஜினியின் தீவிர ரசிகர்கள் தியேட்டரில் தூங்கிவிட்ட வீடியோக்களும், புகைப்படங்களும் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. ரஜினியை சிவா சரியாக பயன்படுத்தவில்லை எனவும், ரஜினிக்கான மாஸான கட்சிகள் இப்படத்தில் இல்லை எனவும் ரஜினி ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
தற்போது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார் சிவா. இவரின் லைன் அப்பில் சூர்யா இருக்கிறார். அண்ணாத்த படத்தில் சிவா கமிட் ஆனதால், ரஜினிக்காக விட்டுக்கொடுத்தார் சூர்யா. தற்போது அடுத்து சிவாவின் இயக்கத்தில் சூர்யா நடிக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
சமீபத்தில் இதுபற்றி கருத்து தெரிவித்த சிவா ‘சூர்யா நடித்த சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் படங்களை பார்த்தேன். இரண்டுமே மிகச்சிறந்த படங்கள். அடுத்து சூர்யாவுடன் இணைய ஆர்வமாக இருக்கிறேன். அவருக்காக செம சுவாரஸ்யமான கதையை தயார் செய்து வைத்துள்ளேன்’ எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து, அடுத்த பர்னிச்சரை உடைக்க சிவா தயாராகிட்டார் என நெட்டிசன்கள் கிண்டலடிக்க துவங்கி விட்டனர்.