யாரும் செய்யாத சாதனை!. இலங்கையிலும் அசால்ட் செய்த நடிகர் திலகம்!.. படம் இவ்வளவு நாள் ஓடியதா?!..

by sankaran v |   ( Updated:2024-05-02 07:59:43  )
Sivaji 24
X

Sivaji 24

இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து கூட்டுத்தயாரிப்பில் ஒரு படம் சிவாஜியை வைத்து எடுத்தது அது தான் பைலட் பிரேம்நாத். இதுகுறித்து அந்தப் படத்தின் இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா...

இலங்கையைச் சேர்ந்த ஒரு தொழிலதிபருடன் இந்திய, இலங்கை கூட்டுத்தயாரிப்பாக முதல் முறையாக ஒரு படம் எடுக்க விரும்பினோம். படம் முழுக்க இலங்கையில் எடுக்கப்பட வேண்டும். இது இந்திய இலங்கை நட்புக்கு ஒரு பாலமாக அமையும்.

நீங்கள் தான் எங்க டைரக்டர். நல்ல கதையை உருவாக்கி தமிழ்நாட்டு நடிகர்கள், டெக்னீசியன்களைக் கொண்டு நீங்களே ஒரு படத்தை இயக்குங்கள். ஆனால் படம் முழுவதும் இலங்கையில் தான் படமாக்க வேண்டும் என்றார் அந்த இலங்கை தொழில் அதிபர்.

Pilot Premnath

Pilot Premnath

படமும் தயாரானது. 1978ல் இது இந்திய இலங்கைக் கூட்டுத்தயாரிப்பு என்ற பெயருடன் வெளியிடப்பட்டது. நடிகர் திலகம் சிவாஜி பைலட்டாக நடித்த படம். ஜோடியாக மாலினி பொன்சேகா நடித்தார். இவர் இலங்கையைச் சேர்ந்தவர். அங்கு எம்.பி.யாக இருந்தவர். விஜயகுமார், தேங்காய் சீனிவாசன், சத்யபிரியா உள்பட பலர் நடித்துள்ளனர்.

கொழும்பு, கதிர்காமம் உள்பட அந்தக் காலத்தில் உள்ள இலங்கையின் பிரபலமான சுற்றுலாத்தலங்களை இந்தப் படத்தில் காணலாம். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார்.

பைலட் உடையில் சிவாஜி கம்பீரமாக இருப்பார். இலங்கையின் இளம் குயில் பாட்டு அப்போது சூப்பர்ஹிட்டான பாடல். அந்தக் காலத்தில் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பாகும். இது சிங்களமொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

எம்.எம்.சலீம் என்பவர் தான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர். டி.எம்.மேனன், சினி இந்தியா புரொடக்ஷன்ஸ், சலீம் ஆகியோர் தயாரித்தனர். சிவாஜி இலங்கை சென்ற போது அங்குள்ள தமிழர்கள் தம் கண்களையே நம்ப முடியாமல் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

Pilot Premnath

Pilot Premnath

இந்திய இலங்கை மக்களுக்கு நெருக்கமானவர் சிவாஜி என்பதால் தான் சிவாஜியைத் தேர்ந்தெடுத்தார்களாம். இந்தியாவில் 100 நாள்களைக் கடந்து ஓடியது. இலங்கையில் 1080 நாள்கள் ஓடி சாதனை படைத்தது. இதுவரை வேறு எந்தப் படமும் இந்த சாதனையைப் படைத்தது இல்லையாம். அந்தமான் காதலி, தியாகம், பைலட் பிரேம்நாத் ஆகிய 3 மாபெரும் வெற்றிப்படங்களும் அதே ஆண்டில் தான் வெளிவந்தன.

Next Story