மீண்டும் தெலுங்கு இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன்… ஆத்தாடி மறுபடியுமா??
தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத ஹீரோவாக திகழ்ந்து வருகிறார் சிவகார்த்திகேயன். தற்போதைய இளைஞர்களின் ரோல் மாடலாக திகழும் இவர், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஹீரோவாகவும் வலம் வருகிறார்.
சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் ஜனரஞ்சக ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும். காமெடி, ஆக்சன், காதல், சென்டிமென்ட் என கலந்துகட்டி அடிப்பார் சிவகார்த்திகேயன். “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”, “ரஜினி முருகன்”, “ரெமோ”, “நம்ம வீட்டுப்பிள்ளை”, “டாக்டர்”, “டான்” போன்ற திரைப்படங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்த திரைப்படங்கள் ஆகும்.
எனினும் கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியான “பிரின்ஸ்” திரைப்படம் ரசிகர்களை ஈர்க்கவில்லை. காமெடி காட்சிகள் சரியாக ஒர்கவுட் ஆகவில்லை எனவும் திரைக்கதை சுமாராக இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. ஆதலால் “பிரின்ஸ்” திரைப்படத்திற்கு வரவேற்பு குறைந்துபோனது.
“பிரின்ஸ்” திரைப்படத்தை அனுதீப் கே.வி. இயக்கியிருந்தார். இவர் தெலுங்கில் “பிட்டகோடா”, “ஜதி ரத்னலு” போன்ற திரைப்படங்களை இயக்கியவர். இதில் “ஜதி ரத்னலு” திரைப்படம் 4 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 75 கோடி வசூல் செய்தது. இவ்வாறு ஒரு பிரம்மாண்ட வெற்றித் திரைப்படத்தை இயக்கிய பின்புதான் “பிரின்ஸ்” திரைப்படத்தை இயக்கினார் அனுதீப்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் மீண்டும் ஒரு தெலுங்கு இயக்குனரிடம் கைக்கோர்க்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாத்துறையின் பிரபல இயக்குனரான ஹரிஷ் ஷங்கர் என்பவர் இந்த படத்தை இயக்கவுள்ளாராம்.
ஹரிஷ் ஷங்கர் தெலுங்கில் “ஷாக்”, “கப்பர் சிங்”, “துவ்வட ஜெகன்னாதம்”, “கட்டலகொண்டா கணேஷ்” போன்ற பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் ஹரீஷ் சங்கர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள திரைப்படத்தை “வாரிசு” தயாரிப்பாளரான தில் ராஜூ தயாரிக்கவுள்ளாராம்.
இதையும் படிங்க: விஜய்க்கு போட்டியாக வந்த பிரபல நடிகர்… கட்டம்கட்டி தூக்க பிளான் போட்ட எஸ்.ஏ.சி… என்னப்பா சொல்றீங்க!!
ஏற்கனவே தெலுங்கு இயக்குனரான அனுதீப்புடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடித்த “பிரின்ஸ்” திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றிருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு தெலுங்கு இயக்குனருடன் சிவகார்த்திகேயன் இணையவுள்ள செய்தி ரசிகர்களுக்கு சிறிது வேதனையை அளித்துள்ளதாம்.