பணத்தை கட்டலனா படம் ரிலீஸ் ஆகாது!. சிவகார்த்திகேயனுக்கு செக் வைத்த தயாரிப்பாளர் சங்கம்...
விஜய் டிவியில் ஆங்கராக இருந்தவர் சிவகார்த்திகேயன். பல மேடைகளில் மிமிக்ரி செய்து வந்தவர். சினிமாவில் நடிக்கும் ஆசை ஏற்படவே தனுஷுடன் 3 படத்தில் சின்ன வேடத்தில் நடித்தார். ஹீரோவாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை வந்ததால் வாய்ப்பு தேடி அலைந்தார். மெரினா என்கிற படத்தில் இயக்குனர் பாண்டிராஜ் இவரை அறிமுகம் செய்து வைத்தார்.
அதன்பின் சில படங்களிலும் நடித்தாலும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படத்தின் வெற்றி இவரை முன்னணி ஹீரோவாக மாற்றியது. அதன்பின் பல படங்களில் நடித்துவிட்டார். அதில் பெரும்பாலானவை வெற்றிப்படங்களே. சொந்த படத்தை தயாரிக்க ஆசைப்பட்டு தனக்குத்தானே ஆப்பு வைத்துக்கொண்டார். சில படங்களின் தோல்வியால் ரூ.100 கோடி வரை அவருக்கு கடன் ஏற்பட்டது.
எனவே, அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரிலீஸாகும்போதும் பஞ்சாயத்து எழுந்தது. எனவே, தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலிருந்தும் சில கோடிகளை கொடுக்கிறேன் என வாக்குறுதி கொடுத்தார். ஆனால், கடந்த சில படங்களில் அவர் அதை பின்பற்றவில்லை. இவரின் நடிப்பில் அடுத்து ‘மாவீரன்’ படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் அவரை அழைத்த தயாரிப்பாளர் சங்கம் ‘தம்பி.. இதுவரை நீங்கள் சொன்னதை நிறைவேற்றவில்லை. மாவீரன் படம் வெளியாகும் நாளுக்கு முன்பு ரூ.33 கோடியை கொடுக்க வேண்டும். இல்லையேல் அந்த படம் தமிழ்நாட்டில் வெளியாகாது’ என கறாராக சொல்லிவிட்டார்களாம்.
எனவே, என்ன செய்வது என முழித்து வருகிறாராம் சிவகார்த்திகேயன்.. பிரச்சனையை அவ்வப்போதே சரி செய்துவிட வேண்டும். இல்லையேல் இப்படித்தான் பின்னாடி பூதாகரமாக வந்து நிற்கும். சிவகார்த்திகேயன் அதை செய்ய தவறிவிட்டார் என திரையுலகில் பேசிக்கொள்கிறார்கள்.