சூரியுடன் எஸ்.கே.வுக்கு இப்படி ஒரு கூட்டா!... சைலண்டா எல்லா வேலையும் பாக்குறாங்க!...

பரோட்டா சாப்பிடும் காட்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் சூரி. அதன்பின் பரோட்டா சூரி என்கிற அடைமொழியோடு பல படங்களிலும் நடித்தார். விஜயுடன் ஜில்லா, அஜித்துடன் வேதாளம், சூர்யாவுடன் அஞ்சான், ரஜினியுடன் அண்ணாத்த என பல படங்களிலும் நடித்தார். குறிப்பாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களில் சூரியின் காமெடி நன்றாக வொர்க் அவுட் ஆகி இருந்தது. எஸ்.கே - சூரி கூட்டணி ரசிகர்களால் […]

Update: 2024-06-07 09:30 GMT

பரோட்டா சாப்பிடும் காட்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் சூரி. அதன்பின் பரோட்டா சூரி என்கிற அடைமொழியோடு பல படங்களிலும் நடித்தார். விஜயுடன் ஜில்லா, அஜித்துடன் வேதாளம், சூர்யாவுடன் அஞ்சான், ரஜினியுடன் அண்ணாத்த என பல படங்களிலும் நடித்தார்.

குறிப்பாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களில் சூரியின் காமெடி நன்றாக வொர்க் அவுட் ஆகி இருந்தது. எஸ்.கே - சூரி கூட்டணி ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. இதில், சீமராஜா படத்திற்காக ஒரு காட்சியில் சிக்ஸ் பேக்கும் வைத்தார்.

இதையும் படிங்க: தியேட்டரில் சத்யராஜிக்கு வந்த திடீர் மரியாதை… யப்பா மனுஷன் என்னம்மா சமாளிக்கிறாரு…!

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் படம் மூலம் தனியாகவும் சூரி காமெடி செய்தார். இந்த படத்தின் காமெடியும் பலருக்கும் பிடித்திருந்தது. அதன்பின் தொடர்ந்து காமெடி வேடங்களில் நடித்த சூரிக்கு விடுதலை படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. வழக்கமான ஹீரோவாக இல்லாமால் கதையின் நாயகனாக நடித்தார்.

இந்த படம் ஹிட் அடிக்கவே இப்படத்தின் விடுதலை படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகி வருகிறது. அதேபோல், கொடி பட இயக்குனரின் இயக்கிய கருடன் படத்திலும் சூரி நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான இந்த படம் சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது. தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகிறார் சூரி.

சூரிக்கு சொந்த ஊர் மதுரை. நடிகராக வளர்ந்தபின் அங்கு ஹோட்டல் ஒன்றை திறந்தார் சூரி. இப்போதும் அது செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஹோட்டலில் நடிகர் சிவகார்த்திகேயனும் முதலீடு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயனுக்கு தொழில்களில் முதலீடு செய்து பிடித்தமான ஒன்று.

ஏற்கனவே சில படங்களை தயாரித்தும் இருக்கிறார். ஆனால், அதில் பல கோடி கடனாளியும் ஆனார். இந்நிலையில்தான் அவர் சூரியின் ஹோட்டலில் முதலீடு செய்திருப்பது தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News