சிவகார்த்திகேயனை சுற்றி இவ்ளோ பெரிய தடுப்புச்சுவரா?.. முகம் சுழிக்கும் நட்பு வட்டாரங்கள்!..

by Rohini |   ( Updated:4 April 2023 11:20 AM  )
siva
X

sivakarthikeyan

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். மிகவும் எளிய மனிதராக அனைவரிடமும் பழகக்கூடிய நடிகராகவே இருந்து வருகிறார் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் வெளியான சமீபகால படங்கள் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

தற்போது ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக அதீதி சங்கர் நடிக்கிறார். அதனையடுத்து கமலின் புரடக்‌ஷனிலும் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். அதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார்.

ஒரு மாஸ் ஹீரோவாக இருந்தாலும் அனைவரிடமும் சகஜமாக பழகக்கூடிய சிவகார்த்திகேயன் சமீபகாலமாக தன் வட்டத்தை சுருக்கிக் கொண்டாராம். நெருங்கிய நண்பர்கள் கூட தொலைபேசியில் அழைத்தாலும் அவர் வந்து பேசுவதில்லையாம். முன்பெல்லாம் சிவகார்த்திகேயனை எளிதாக தொடர்பு கொள்ளும் படியாக தான் இருந்ததாம்.

ஆனால் இப்பொழுது அஜித், விஜய், சூர்யா வழியை பின்பற்ற ஆரம்பித்து விட்டார் என்று தெரிந்தவர்கள் புலம்பி வருகின்றனர். அவர் கூடவே அருண் விஷ்வா என்ற ஒரு தயாரிப்பாளரும் , ஆர்.டி.ராஜாவிடம் இருந்த கலை என்பவரும் தான் சிவகார்த்திகேயனுக்கு ஒரு தடுப்பு சுவராக இருந்து வருகிறார்களாம். அவர்களை தாண்டி எதுவும் நடக்காது என்பது மாதிரி கோடம்பாக்கத்தில் பேசிவருகிறார்கள்.

மேலும் தனக்கு உதவியாக இருந்தவர்களை கூட சிவகார்த்திகேயன் ஒரு கட்டத்தில் மதிப்பதில்லை என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை வலைப்பேச்சு பிஸ்மி கூறினார். அதாவது திருச்சி தான் சிவகார்த்திகேயனுக்கு பூர்வீகம். அவரது அப்பா மறைவிற்கு பிறகு பூர்வீக வீட்டில் தான் அவரது தாயார் இருந்து வருகிறாராம். அவருக்கு தேவையான பணம் , மற்றும் பிற உதவிகளை தன் நெருங்கிய நண்பர் காதர் பாட்ஷா மூலம் தான் சிவகார்த்திகேயன் செய்து வந்தாராம்.

ஒரு கட்டத்திற்கு மேலாக காதர் பாட்ஷாவையும் விரட்டி விட்டாராம். இதே போல தான் சினிமாவிற்குள் வருவதற்கு உதவியாக இருந்த தனுஷ், ஆர்,டி மதன் ஆகியோரையும் சிவகார்த்திகேயன் மறந்து விட்டார் என்று வலைப்பேச்சு பிஸ்மி கூறினார்.

இதையும் படிங்க : வெற்றிமாறனின் காருக்கு முன் விழுந்து வாய்ப்பு கேட்ட பிரபல நடிகர்… கோபத்தில் என்ன செய்தார் தெரியுமா?

Next Story