அந்த விஷயத்தில் நான் கிங்குடா.! புதுசா ஒரு மேட்டரை களமிறக்கும் எஸ்.ஜே.சூர்யா.!

by Manikandan |   ( Updated:2022-04-29 06:26:10  )
அந்த விஷயத்தில் நான் கிங்குடா.! புதுசா ஒரு மேட்டரை களமிறக்கும் எஸ்.ஜே.சூர்யா.!
X

தான் நடிகராக வேண்டும் என தமிழ் சினிமாவில் களமிறங்கி அடுத்து நம்மை வைத்து யாரும் நடிக்க வைக்க மாட்டார்கள் அதனால், நாமே இயக்கி நடித்தால் தான் உண்டு என யோசித்து, அடுத்து முதலில் இயக்கத்தை கையில் எடுத்து உச்சம் தொட்ட இயக்குனர் என்றால் அவர் எஸ்.ஜே.சூர்யா தான்.

இவர் தமிழில் இயக்கிய முதல் 2 திரைப்படம் அந்தந்த நடிகர்களுக்கு பெரிய கம்பேக் திரைப்படமாக அமைந்தது. எஸ் ஜே சூர்யா இயக்கிய முதல் திரைப்படமான 'வாலி' திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. அதேபோல விஜய்க்கு அவர் இயக்கிய குஷி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

அதன்பிறகுதான் அவரே இயக்கிய நியூ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அவரே இயக்கி சில படங்கள் நடித்து வந்தார். அதன்பிறகு இறைவி திரைப்படம் மூலம் மீண்டும் நடிப்புக்கு ரீஎன்ட்ரி கொடுத்து தற்போது வரை நடிப்பு அசுரனாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார் எஸ்.ஜே.சூர்யா.

வாலி, குஷி திரைப்படங்கள் போல மீண்டும் ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம் கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், தற்போது ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. எஸ்.ஜே.சூர்யா மீண்டும் இயக்க உள்ளாராம். அந்த படத்தில் அவரே ஹீரோவாக நடிக்க உள்ளாராம். அந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஒரு கார் பங்கேற்ற உள்ளதாம். அதற்காக வெளிநாட்டில் அந்த காரை தயார் செய்து வருகிறாராம்.

இதையும் படியுங்களேன் - ரிவர்ஸ் கியரில் செல்லும் அஜித்.! இதுதான் இப்போ ட்ரெண்ட்.!

இந்த படத்தில் ஓர் புதுமுக ஹீரோயினை தமிழ் சினிமாவிற்கு களமிறக்க உள்ளாராம் எஸ்.ஜே.சூர்யா. கடைசியாக அவர் நடித்து இயக்கிய இசை திரைப்படத்திலும் புதுமுக ஹீரோயினை களமிறக்கி இருப்பார் எஸ்.ஜே.சூர்யா. அதேபோல இந்த படத்திற்கும் புது ஹீரோயினை களமிறங்க உள்ளாராம் எஸ்.ஜே.சூர்யா.

இந்த படத்திற்கு கில்லர் என தலைப்பு வைக்கப் பட்டதாகவும் தகவல் கசிந்துள்ளது. இது ஒரு புது மீட்டராக இருக்கும் என கூறப்படுறது. மேலும் தமிழ் சினிமாவில் இந்த மேட்டர் எஸ்.ஜே.சூர்யா பாணியில் புதியதாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story