திவ்யாவாக திரையுலகை திண்டாட வைத்த சோனியா.. த்ரிஷா நயன் ரேஞ்சுக்கு ஏன் ஜொலிக்க முடியல?

Actress Sonia Agarwal: தமிழ் சினிமாவில் எத்தனையோ புதுமுக நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம். அதிலும் தன் கண்களில் மூலம் எல்லா விதமான உணர்வுகளையும் வெளிப்படுத்தக்கூடிய நடிகையை காண்பது மிக அரிது. அதில் அடிச்சுக்கவே முடியாத நடிகை என்றால் அது சோனியா அகர்வால் தான். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சோனியா அகர்வால் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் முதலில் மாடலிங் துறையில் நுழைந்தார். அதன் பிறகு ஒரு சீரியலில் நடிக்க அந்த சீரியல் மூலம் தெலுங்கு சினிமாவில் நடிக்க […]

By :  Rohini
Update: 2024-06-03 04:40 GMT

soniya

Actress Sonia Agarwal: தமிழ் சினிமாவில் எத்தனையோ புதுமுக நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம். அதிலும் தன் கண்களில் மூலம் எல்லா விதமான உணர்வுகளையும் வெளிப்படுத்தக்கூடிய நடிகையை காண்பது மிக அரிது. அதில் அடிச்சுக்கவே முடியாத நடிகை என்றால் அது சோனியா அகர்வால் தான். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சோனியா அகர்வால் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் முதலில் மாடலிங் துறையில் நுழைந்தார்.

அதன் பிறகு ஒரு சீரியலில் நடிக்க அந்த சீரியல் மூலம் தெலுங்கு சினிமாவில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்தது. அந்த படத்தில் அப்பாஸ் வினித் ஆகியோர் நடிக்க அவர்களுக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்திருப்பார். அதன் பிறகு கன்னடத்தில் சுதீப்புடன் ஜோடி சேர்ந்து நடிக்க தமிழில் காதல் கொண்டேன் என்ற படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார் சோனியா.

இதையும் படிங்க: இப்படி நான் எவனுக்கும் செஞ்சதில்லை!.. சூரியை அழ வைத்த இளையராஜா.. நடந்தது இதுதான்!..

அந்தப் படத்தில் இருந்து திவ்யா என்ற பெயர் மிகவும் பிரபலமானது. காட்சிகளுக்கு ஏற்ப எல்லாவிதமான உணர்வுகளையும் தன் கண்களில் காட்டக்கூடிய ஒரே நடிகையாக சோனியா அகர்வால் இருந்தார். அவர் நடித்த செவன் ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை ,கோவில், திருட்டுப் பயலே போன்ற படங்களை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு படத்திலும் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பார் சோனியா.

அவர் பல படங்களில் நடித்திருந்தாலும் அவருடைய கரியரில் 5 படங்கள் மட்டுமே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதுதான் இப்போது வரைக்கும் சோனியாவை அடையாளம் காட்டி வருகிறது. திரிஷா ,நயன், சோனியா ஆகிய மூவரும் ஒரே காலகட்டத்தில் சினிமாவிற்குள் வந்தவர்கள் தான். ஆனால் அவர்கள் இருவரும் இன்னும் டாப் நடிகையாக இருக்க சோனியா அகர்வால் மட்டும் ஏன் அந்தளவு ஜொலிக்க முடியவில்லை என்றால் ஹீரோயினுக்கே உரித்தான ஒரு பிம்பம் என்றால் அது கிளாமர் சைடு தான்.

இதையும் படிங்க: சிவாஜியோட வயிறு நடிச்ச படம் எதுன்னு தெரியுமா? அடடே அது சூப்பர்ஹிட்டாச்சே? இப்படி எல்லாமா நடந்தது?

அந்த பக்கத்தை தன்னால் கொடுக்க முடியாது என்பதில் தீவிரமாக இருந்தார் சோனியா. அதன் காரணமாகவே அவரால் அந்த டாப் நடிகை ரேஞ்சுக்கு வர முடியவில்லை. இருந்தாலும் கைவசம் ஐந்து படங்களை வைத்திருக்கும் சோனியா ஒரு சில படங்களில் குணச்சித்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் குக்காக வந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் சோனியா அகர்வால்.

Tags:    

Similar News