பொண்ணுங்களோட கற்பனைலதான் சந்தோஷமா வாழ முடியும்!.. சூது கவ்வும் 2 டீசரே தாறுமாறா இருக்கே பாஸ்!..

by Saranya M |   ( Updated:2024-03-22 15:04:18  )
பொண்ணுங்களோட கற்பனைலதான் சந்தோஷமா வாழ முடியும்!.. சூது கவ்வும் 2 டீசரே தாறுமாறா இருக்கே பாஸ்!..
X

சூது கவ்வும் 2 படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. நலன் குமாரசுவாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், கருணாகரன், எம்எஸ் பாஸ்கர், சஞ்சிதா ஷெட்டி போன்ற பலர் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு சூது கவ்வும் திரைப்படம் வெளியானது.

அந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக்கியுள்ளது. இந்தப் படத்தை அர்ஜுன் என்பவர் இயக்கியுள்ளார். மேலும், ஹீரோவாக மிர்ச்சி சிவா நடித்துள்ளார். சூது கவ்வும் திரைப்படத்தைப் போலவே இந்தப் படத்திலும் மிர்ச்சி சிவாவின் கதாபாத்திரம் ஹலுசினேஷனான ஹீரோயினை காதலிக்கும் கதாபாத்திரமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இதை விட உயரத்துக்கு நான் போனாலும்!.. கேரள ரசிகர்களுடன் செல்ஃபியுடன் அந்த விஷயத்தையும் பேசிய விஜய்!..

டீசரின் இறுதியில் மிர்ச்சி சிவாவிடம், “நீயும் எவ்ளோ நாள் தான் கனவுலையே காதலிச்சிட்டு இருப்ப, நிஜத்துல அந்த பொண்ண தூக்கிட்டு வந்து சந்தோஷமா வாழலாமே என உடன் இருப்பவர்கள் சொல்ல, அதற்கு பஞ்ச் கொடுக்கும் விதமாக, “பொண்ணுங்களோட கனவுல தான் சந்தோசமா வாழ முடியும், கல்யாணம் பண்ணினா நிஜத்துல சந்தோசமா இருக்க முடியாது” என மிர்ச்சி சிவா ஆரம்பமே அலப்பறையை கிளப்பியுள்ளார்.

சூது கவ்வும் முதல் பாகத்தில் நடித்த கருணாகரன், எம்.எஸ் பாஸ்கர், உள்ளிட்ட சிலர் இந்த படத்திலும் நடித்துள்ளனர். ஹீரோயினாக ஹரிஷா என்பவர் சஞ்சிதா செட்டிக்கு பதிலாக நடித்துள்ளார்.

இதையும் படிங்க: சிவாஜிக்கே நடித்து காட்டிய இயக்குனர்!.. கண்ணாடி முன்பு இரவு முழுவதும் பயிற்சி எடுத்த நடிகர் திலகம்!

சூது கவ்வும் படத்தின் பேட்டர்னிலேயே இந்த படமும் உருவாகி இருக்கிறது. மிர்ச்சி சிவா கஷ்டப்பட்டு சிரிக்காமல் நடித்து ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த டீசரை விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா உள்ளிட்ட பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர்.

Next Story