‘தவசி’ படத்தில் நடிக்க மறுத்த சௌந்தர்யா! - கேப்டன் செய்த காரியம்.. காலடியில் விழுந்த அம்மணி

by Rohini |   ( Updated:2023-05-27 17:44:54  )
viji
X

viji

கன்னட சினிமா மூலம் முதன்முதலில் அறிமுகமானவர் நடிகை சௌந்தர்யா. சினிமா பின்னணி குடும்பத்தில் இருந்து வந்த சௌந்தர்யாவிற்கு ஏற்கனவே சினிமாவைப் பற்றிய சில அனுபவங்களும் இருந்தன. அந்த சமயத்தில்தான் பொன்னுமணி படத்தின் வாய்ப்பு சௌந்தர்யாவை தேடி வந்தது.

ஆர் வி உதயகுமார் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் உருவான படம் தான் பொன்னுமணி. அந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படத்தில் அமைந்த பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. மேலும் சௌந்தர்யாவும் அந்த படத்தில் மிகவும் அழகாக இருப்பார்.

viji1

viji1

அதை அடுத்து சௌந்தர்யாவுக்கு அருணாச்சலம் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் ரஜினி சொல்லியே சௌந்தர்யாவை அணுகினார்கள். இப்படி தமிழில் ஒரு முன்னணி நடிகைக்காக வலம் வந்தார் சௌந்தர்யா. தொடர்ந்து காதலா காதலா, படையப்பா ,தவசி போன்ற படங்கள் வரிசையாக வந்தன. அதுவும் தவசி படத்தில் விஜயகாந்த்திற்கும் சௌந்தர்யாவுக்கும் இடையே இருந்த கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

இந்த நிலையில் தவசி படத்தில் முதலில் சௌந்தர்யா நடித்த பயந்தாராம். அதற்கு காரணம் விஜயகாந்த். ஏனெனில் விஜயகாந்த் பற்றி ஒரு சில பேர் தவறாக சௌந்தர்யாவிடம் சொல்லி இருக்கின்றனர். அதாவது கேப்டன் அடிக்கடி கோபப்படுவார் என்றும் சில சமயங்களில் கோபத்தில் அடித்தும் விடுவார் என்றும் கூறியிருக்கின்றனர்.

viji2

viji2

இதனாலேயே சௌந்தர்யா அந்தப் படத்தில் நடிக்க மறுத்தாராம். இதை அறிந்த விஜயகாந்த் சௌந்தர்யாவை ஒரு மூன்று நாட்கள் படப்பிடிப்பில் சும்மா வந்து உட்காருமாறு சொல்லி இருக்கிறார். அந்த நாட்களில் சௌந்தர்யா இல்லாத காட்சியை மட்டும் படமாக்கினார்களாம். அதுமட்டுமில்லாமல் அந்த நாட்களில் விஜயகாந்த் எப்படிப்பட்டவர் என்பதையும் சௌந்தர்யா புரிந்து கொண்டாராம் அதன் பிறகு விஜயகாந்திடம் மன்னிப்பும் கேட்டாராம்.

Next Story