ஷூட்டிங்கே இன்னும் தொடங்கல… பாலிவுட்டில் இருந்து சிம்புவுக்காக இறக்கப்பட்ட முன்னணி நடிகை…

by Akhilan |
ஷூட்டிங்கே இன்னும் தொடங்கல… பாலிவுட்டில் இருந்து சிம்புவுக்காக இறக்கப்பட்ட முன்னணி நடிகை…
X

Silambarasan: சிம்புவின் அடுத்த பட அறிவிப்பு வெளிவந்தாலும் இன்னும் ஷூட்டிங் மட்டும் தொடங்கப்படாமல் இருக்கும் நிலையில் இப்படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவரை படக்குழு முடிவு செய்து பாலிவுட்டில் இருந்து இறக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

பெரிய பிரேக்கிற்கு பின்னர் நடிகர் சிம்பு நடித்த மாநாடு படம் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பை பெற்று கொடுத்தது. இதை தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார் சிம்பு. ராஜ்கமல் தயாரிப்பில் 48வது படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தினை தேசிங்கு பெரியசாமி இயக்க இருக்கிறார். ஆனால் அப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படாமல் இருக்கிறது.

இதையும் படிங்க: ‘விடுதலை’ படத்திற்கு எதிராக சேலஞ்ச் விட்ட சிவகார்த்திகேயன்! சரியான போட்டிதான்

இந்த பிரேக்கை பயன்படுத்திக்கொண்ட தயாரிப்பு குழு சிம்புவை கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தில் இணைத்தது. துல்கர் அல்லது ஜெயம் ரவி கேரக்டர் எனக்கு செட்டாகாது என சிம்பு ஜெர்க் ஆக அவருக்காக மணிரத்னம் கதையையே மாற்றியதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

இப்படத்தில் கமலின் மகனாக சிம்பு நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சிம்புவின் 48வது பட வேளைகளையும் படக்குழு தொடங்கி இருக்கிறதாம். இப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாகவும், வரலாற்று கதையாகவும் இப்படம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: எம்.எஸ்.விக்கே பிடிக்காத பாடல்!.. நம்பிக்கை சொன்ன கண்ணதாசன்!.. அட அந்த சூப்பர் ஹிட் பாட்டா?!..

மேலும் இப்படத்தில் சிம்புவுக்கு இரண்டு நாயகிகள் எனக் கூறப்பட்டுள்ள நிலையில் அதில் ஒரு நடிகையாக கியாரா அத்வானி தேர்வாகி இருக்கிறார். இவருடன் படக்குழு பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும் தகவல்கள் கிசுகிசுக்கிறது. இருந்தும் படத்தின் ஷூட்டிங் தக் லைஃப் முடிந்தே தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

Next Story