மலையாள நடிகர்.. பாலிவுட் நடிகை!.. அடுத்த படத்துக்கு பக்கா ஸ்கெட்ச் போடும் சூர்யா...
சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகி 2 வருடங்கள் ஆகிவிட்டது. இன்னமும் அவரின் அடுத்த படம் வெளியாகவில்லை. கங்குவா படம் துவங்கிய போதே அவர் இந்த படத்தில் நடிக்கிறார்... அந்த படத்தில் நடிக்கிறார் என செய்திகள் வெளியானதே தவிர அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.
சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா படம் அதிக பொருட்செலவில் உருவாகி வருகிறது. கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேல் இப்படம் உருவாகி வருகிறது. சூர்யா இரட்டை வேடத்தில் இப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பத்தானி நடித்திருக்கிறார். மேலும், யோகிபாபு, பாபி தியோல், ரெட்டின் கிங்ஸ்லி, கோவை சரளா என பலரும் நடித்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: மனைவியை பிரியும் ஜி.வி.பிரகாஷ்!. விரைவில் விவாகரத்து?.. அட போங்கப்பா!.
ஒருபக்கம் வெற்றிமாறனின் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் சூர்யா எப்போது நடிப்பார் என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது. ஆனால், விடுதலை 2 படத்தையே இன்னமும் வெற்றிமாறன் முடிக்கவில்லை. ஒருபக்கம், சூரரைப்போற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா மீண்டும் புறநானூறு என்கிற படத்தில் நடிப்பதாக சொல்லப்பட்டது.
ஆனால், முழுக்கதையை சுதாகொங்கரா முடித்த பின்னரும் அதில் சில மாறுதல்களை சூர்யா சொல்லி இருப்பதாகவும், அதில் சுதாகொங்கராவுக்கு விருப்பமில்லை எனவும் சொல்லப்படுகிறது. இந்த படம் ஹிந்தி எதிர்ப்பு காலத்தில் நடந்த கதை என்பதால் சர்ச்சையில் சிக்க வேண்டாம் என நினைத்த சூர்யா இப்படத்தை தள்ளை வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: ‘எஜமான்’ படத்தில் நடிக்க பயந்த ரஜினி!.. இவ்ளோ ரிஸ்க் எடுத்தா நடிச்சாரு?
புறநானுறு படம் தள்ளி வைக்கப்பட்டதால் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் சூர்யா. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. சூர்யா சமீபகாலமாக பாலிவுட் நடிகைகளுடன் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
கங்குவா படத்தில் திஷா பத்தானி நடித்து வருகிறார். அதேபோல், கார்த்திக் சுப்பாராஜ் படத்திலும் ஒரு பாலிவுட் நடிகையை களமிறக்க திட்டமிட்டுள்ளனர்.