பிரபல தொலைக்காட்சி மீது வழக்கு தொடரும் தமன்னா? இதுதான் காரணமா?

by adminram |   ( Updated:2021-10-27 02:52:05  )
tamanna
X

ரவிகிருஷ்ணா நடிப்பில் வெளியான கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் தமன்னா. இப்படத்தில் வில்லத்தனமான வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். இதன்பின் இவர் நடிப்பில் வெளியான கல்லூரி படம்தான் இவரை அனைத்து மக்களிடமும் கொண்டுபோய் சேர்த்தது.

அதன் பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய அளவில் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது ஒரு கட்டத்தில் விஜய், அஜித் மற்றும் சூர்யா என தமிழில் அனைத்து முன்னணி நடிகர்கள் படங்களிலும் ஜோடியாக நடித்தார்.

தமிழில் கடந்த 2009 முதல் 2011 வரை இவர் ஆதிக்கம்தான். இந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 10 படங்களுக்கும் மேல் நடித்தார். கடைசியாக தமிழில் இவர் கடந்த 2019ல் விஷாலுடன் இணைந்து 'ஆக்சன்' படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் பாடல் காட்சிகளில் உச்சகட்ட கவர்ச்சி காட்டியிருந்தார்.தமிழைப்போலவே தெலுங்கிலும் இவர் முன்னணி நடிகையாக உள்ளார்.

இந்நிலையில் தமிழில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவதுபோல், தெலுங்கில் அந்நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால், திடீரென அந்நிகழ்ச்சியிலிருந்து இவர் நீக்கப்பட்டு, அவருக்குப் பதில் அனுசியா என்பவர் தொகுத்து வழங்கினார்.

tamanna

tamanna

இந்நிகழ்ச்சியிலிருந்து அவர் ஏன் பாதியில் விளக்கினார் என்பதற்கான காரணம் இதுநாள் வரை தெரியாமல் இருந்தது. இந்நிலையில், தமன்னாவின் வழக்கறிஞர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்நிகழ்ச்சியில் முழுமையான சம்பளம் தமன்னாவிற்கு வழங்கப்படவில்லை.

தொழில் ரீதியாகவும் அவரிடம் சரியாக நடந்துகொள்ளவில்லை. தமன்னா இந்நிகழ்ச்சிக்கு முழு ஒத்துழைப்பை கொடுத்தும் நிறுவனம் அவரிடம் தொடர்பை துண்டித்துவிட்டது. இதனால் அந்த நிறுவனத்தின்மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளோம் என கூறியுள்ளார்.

Next Story