Gossip: எல்லாம் போச்சு… அக்கட தேசத்தை நம்பி இருந்த பேரை கெடுத்துக்கிட்ட சன் நடிகர்…
Gossip: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த சன் நடிகர் மனைவிக்காக வேறு பக்கம் குடிப்பெயர்ந்தார். ஆனால் அவருக்கு அக்கட தேசத்தில் ஒரு படம் நடிக்க வேண்டும் என்ற ஆசையின் காரணமாகத்தான் மனைவியை சொல்லி கோலிவுட்டில் இருந்து எஸ்கேப் ஆகினார்.
தமிழ் சினிமாவில் அப்பா பெயரை சொல்லி வந்தாலும் தன்னுடைய நடிப்பால் ஒரு இடத்தைப் பிடித்து வைத்திருந்தார். ஒரு கட்டத்தில் அவர் நடித்த எல்லா படங்களுமே சூப்பர் ஹிட் ஆனது. இருந்தும் அவரின் விபரீத ஆசையால் தமிழில் மிகப்பெரிய பிரேக் எடுத்தார்.
இதையும் படிங்க: நா செகண்ட் ஹேண்ட்டா?!.. டைவர்ஸ் ரொம்பவே வலிச்சது!.. திடீரென வைரலாகும் சமந்தா!..
அந்த இடைவேளையில் அவருடைய சக நடிகர்கள் எல்லாம் மிகப்பெரிய உச்சத்தை அடைந்துவிட்டனர். ஆனால் இதிகாசப் படத்தில் அக்கட தேசத்தில் ஒப்பந்தமான சன் நடிகர் அந்த தைரியத்தில் தமிழ் இயக்குனர்களுக்கு ஆட்டம் காட்டி வந்தார்.
சமீபத்தில் விலங்கு இயக்குனர் இயக்கிய பிரம்மாண்ட திரைப்படம் தமிழ் சினிமாவின் உச்சபட்ச வெற்றியை தக்க வைக்கும் என திட்டம் தீட்டினார். கோடிக்கணக்கில் வசூலை குவிக்கலாம் என அவர்கள் நினைத்த எண்ணம் தவிடு பொடியானது. எக்கச்சக்க விமர்சனங்கள் குவிந்தன.
இதை தடுக்க குடும்பமே சேர்ந்து பல வழிகளில் போராடியது. ஆனால் எதுவும் வேலைக்காகவில்லை. இதனால் அக்கடதேச வாய்ப்பு தற்போது இழுபறியாகி இருக்கிறது. இவரை நம்பி அத்தனை கோடியை முதலீடு செய்தால் முதலுக்கே மோசம் என்னும் நிலை வந்து விடும் என்பதால் தயாரிப்பாளர்கள் தயங்குவதாக விஷயம் கசிந்து இருக்கிறது.
இதையும் படிங்க: நயன்தாராலாம் சும்மா!. நாக சைதன்யா – சோபிதா திருமண ஒளிபரப்புக்கு எவ்வளவு கோடி தெரியுமா?!…
ஓவர் வெற்றியால் மனைவியின் பேச்சைக் கேட்டு தேவையே இல்லாத முடிவை எடுத்து தற்போது இருந்ததும் போச்சு என்ற நிலைக்கு வந்திருக்கிறாராம். இதனால் சன் நடிகரை அவருடைய மனைவியுடன் சமீப காலமாக கோயில்களில் பார்க்க முடிகிறது. எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருப்பவருக்கு தற்போது முகமே தொங்கி போய் இருப்பதையும் ரசிகர்கள் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கின்றனர்.