Gossip: சன் நடிகருக்கும், வெளிச்ச நடிகைக்கும் விரிசலாம்… வீட்டில் திடீரென புகையும் பிரச்னை!

By :  Akhilan
Published On 2025-07-28 14:21 IST   |   Updated On 2025-07-28 14:21:00 IST

Gossip: கோலிவுட்டின் நட்சத்திர பட்டாளத்துக்கே கடந்த சில மாதங்களாக என்ன ஆனது என்றே தெரியவில்லை. விவகாரத்து விவகாரம் தொடர்ந்து வெடித்து வருகிறது. அந்த வகையில் இன்னொரு முக்கிய பிரபல தம்பதி வீட்டிலும் தற்போது விரிசல் தொடங்கி இருக்கிறதாம்.

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக எண்ட்ரி கொடுத்தாலும், தொடர்ந்து தன்னுடைய முயற்சியால் முக்கிய நடிகராக அடையாளர் பெற்றார். ஆனால் அவர் காதல் மனைவியும், வெளிச்ச நடிகையும் அதை மொத்தமாக போட்டு உடைத்து விட்டார்.

அம்மணிக்கு முதலில் இந்தியில் தான் பெரிய இடம் பிடிக்க ஆசை. ஆனால் அங்கு ஒரு படம் மட்டுமே நடித்தவருக்கு அப்புறம் வாய்ப்பு இல்லாமல் திணறி இருந்தவருக்கு தமிழ் வாழ்க்கை கொடுத்தது. தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டார்.

அதுமட்டுமல்லாமல் பழம்பெரும் நடிகரின் மகனான சன் நடிகரை காதலித்து அடம் பிடித்து வீட்டில் சண்டை பிடித்து இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். கொஞ்ச வருடங்கள் அமைதியாக இருந்தவர். பின்னர் நடிப்பில் இறங்கினார். தமிழில் மீண்டும் பழைய இடத்தினை அவரால் பிடிக்கவே முடியவில்லை.

தனக்கென ஒரு கண்டிஷனை போட்டுக்கொண்டு அம்மணி நடித்த படங்கள் பெரிய அளவில் ஈர்ப்பை கொடுக்கவும் இல்லை. இதனால் மீண்டும் தன்னுடைய பழைய ஆசையை தூசி தட்டி இந்தி பக்கம் தன் கணவரையும் அழைத்துக்கொண்டு சென்றார். அங்கு சன் நடிகருக்கு வாய்ப்பே இல்லை.

ஆனால் அம்மணி தனக்கென தொடர்ச்சியாக வாய்ப்புகளை குவித்துக்கொண்டார். அதுமட்டுமல்லாமல் அங்கு இடம் பிடிக்க தமிழ் சினிமாவை தொடர்ந்து அசிங்கப்படுத்தும் விதமாக நடந்துக்கொண்டு வருகிறார். ஆனால் இது சன் நடிகர் குடும்பத்துக்கே பிடிக்கவில்லையாம்.

சன் நடிகர் தனக்கு அதுதான் சரியென மீண்டும் தமிழ் பக்கம் திரும்பினாலும் பழைய புகழை தொலைத்துவிட்டாராம். இதனால் அடிக்கடி இருவருக்கும் உரசல் தொடர்கிறதாம். ஏற்கனவே மருமகள் மீது கடுப்பில் இருந்து பழம்பெறும் சாமி நடிகர் மகனுக்கு தமிழ் சினிமாவை விட்டுவிடாதே என ஐடியா சொல்லி வருகிறாராம்.

ஆனால் வெளிச்ச நடிகை தன்னுடைய ஆசை பாலிவுட் பக்கம் தான் என்பதால் கணவர் பேச்சை கேட்பதும் இல்லையாம். ஏற்கனவே ஏகப்பட்ட விவாகரத்து செய்தி குவிந்து வரும் நிலையில் இவர்கள் விவாகரத்தும் அறிவிக்கப்பட்டால் ஆச்சரியமில்லை என்ற பேச்சும் எழுந்து வருகிறது.

Tags:    

Similar News