Gossip: பிரச்னையை புகைய விட்டதே இரண்டெழுத்து நடிகர் தானாம்!... அதுக்கு பின்னாடி இவ்வளவு ஐடியாவா?
Gossip: கோலிவுட்டில் குட் பாய் லுக்கில் வலம் வந்த அந்த இரண்டெழுத்து நடிகர் பற்றி தான் தற்போது பேச்சாக இருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் பின்னால் அவர் தான் இருக்கிறார் என்ற தகவல்களும் தற்போது கசிந்துள்ளது.
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக வந்தவர் அந்த இரண்டெழுத்து நடிகர். ஆரம்பத்தில் இருந்தே லவ் பாய் லுக்கில் வலம் வந்தார். அவருக்கென பெண் ரசிகைகள் ஏராளம். இருந்தாலும் பிரபல தயாரிப்பாளர் மகளை காதலித்து கைபிடித்தார்.
இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் கடந்தாண்டு தன்னுடைய திருமண உறவை முறிப்பதாக இவர் மட்டும் அறிக்கை விட அவர் மனைவி எனக்கு இந்த விஷயம் குறித்தே தெரியாது என்றும் நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை என் கணவர் கொச்சை படுத்திவிட்டதாகவும் அறிக்கை விட்டு இருந்தார்.
இதுமட்டுமல்லாமல் இரண்டெழுத்து நடிகர் பிரச்னைக்கு அவருக்கும் இன்னொரு பாடகி காதலிக்கும் இருந்த உறவு என தகவல் பரவிய உடனே அவங்களுக்கும் எனக்கு இந்த உறவெல்லாம் இல்லை. அவங்க என் பிரண்டு என பூசி மொழுகினார்.
தொடர்ந்து தன் மனைவி குறித்து ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை வைத்து பிரச்னையை திசை திருப்பினார். சொத்தை எல்லாம் பிடிங்கி விட்டதாகவும் என்னிடம் காசே இல்லை என பல புகார்களை முன் வைத்தார். இதை தொடர்ந்து இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
ஆனால் இரு தரப்பும் சுமூகமாகாமல் இருக்கிறது. தொடர்ந்து நடிகர் தரப்பு விவாகரத்து கேட்டும் மனைவி முடியாது என மறுத்து வருகிறாராம். இதனால் தொடர்ந்து இந்த வழக்கு நீண்டுக்கொண்டே செல்கிறதாம். சமாதானம் விவகாரம் கூட நடக்கவில்லையாம்.
இந்நிலையில் தான் நடிகர் தன்னுடன் கிசுகிசுக்கப்பட்ட பாடகியுடன் தம்பதியாக திருமண விழாவில் கலந்துக்கொள்ள விஷயம் பற்றிக்கொண்டது. ஒரே கலர் உடையில் கூட்டத்தில் கைப்பிடித்து இருவரும் செல்ல இவங்களையா பிரண்டுனு சொன்னாரு எனவும் கேள்வி எழுந்து வருகிறது.
ஆனால் நடிகர் இதை யோசிக்காமலா அவங்களை அழைத்து வந்திருப்பார். பொதுவெளியில் இப்படி வரும் போது விவாகரத்து வழக்குக்கு முடிவு வந்துவிடும் என்பது அவர் கணிப்பாம். அதுமட்டுமல்லாமல் தன்னை அப்பாவி லுக்கில் காட்டிக்கொண்ட நடிகர் மனைவியிடம் இருந்து தன் சொத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் கூட இறங்கி இருக்கிறாராம்.