68வது தேசிய விருதுகள் அறிவிப்பு...10 விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா....

கடந்த 2020ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தமிழ் சினிமா மொத்தம் 10 விருதுகளை அள்ளியுள்ளது. இதில், சூரரைப்போற்று திரைப்படம் மட்டும் 5 விருதுகளை அள்ளியுள்ளது. சிறந்த படம் – சூரரைப்போற்று, சிறந்த நடிகர்- சூர்யா, சிறந்த நடிகை – அபர்ணா பால முரளி, சிறந்த பின்னணி இசை – ஜிவி பிரகாஷ், சிறந்த திரைக்கதை – சுதா கொங்கரா என சூரரைப்போற்று படத்திற்கு 5 பிரிவுகளில் விருதுகள் கிடைத்துள்ளது. மேலும், சிறந்த தமிழ் […]

Update: 2022-07-22 08:26 GMT

கடந்த 2020ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தமிழ் சினிமா மொத்தம் 10 விருதுகளை அள்ளியுள்ளது.

இதில், சூரரைப்போற்று திரைப்படம் மட்டும் 5 விருதுகளை அள்ளியுள்ளது. சிறந்த படம் – சூரரைப்போற்று, சிறந்த நடிகர்- சூர்யா, சிறந்த நடிகை – அபர்ணா பால முரளி, சிறந்த பின்னணி இசை – ஜிவி பிரகாஷ், சிறந்த திரைக்கதை – சுதா கொங்கரா என சூரரைப்போற்று படத்திற்கு 5 பிரிவுகளில் விருதுகள் கிடைத்துள்ளது.

மேலும், சிறந்த தமிழ் திரைப்பட விருது ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்’ படத்திற்கும், இப்படத்தில் எடிட்டராக பணிபுரிந்த ஸ்ரீகர் பிரசாத்திற்கும் சிறந்த எடிட்டர் விருதும், இப்படத்தில் நடித்த பிரியா சந்திரமௌலிக்கு சிறந்த துணை நடிகை விருதும் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், சிறந்த வசனத்திற்கான தேசியவிருது மண்டேலா படத்திற்கும், சிறந்த அறிமுக இயக்குனர் விருது மண்டேலா படத்தின் இயக்குனர் மடோனா அஸ்வினுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, மொத்தம் 10 தேசிய விருதுகளை தமிழ் சினிமா பெற்றுள்ளது தமிழ் திரையுலகினருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

Tags:    

Similar News