ஷாலின் ஷோயா முதல் டிடிஎஃப் வாசன் வரை… பிக்பாஸ் தமிழ் 8ல் எண்ட்ரியாகும் முக்கிய பிரபலங்கள்…

by ராம் சுதன் |   ( Updated:2024-07-17 18:15:07  )
biggboss
X

ஒரே வீட்டில் அறுபது கேமராக்களின் முன்னால் 100 நாட்கள் செலிப்ரட்டியின் வாழ்க்கையை சொல்லும் ரியாலிட்டி ஷோ பிக்பாஸ். இதன் தமிழ் பதிப்பு இதுவரை ஏழு சீசன்களை வெற்றிகரமாக முடித்திருக்கும் நிலையில் விரைவில் எட்டாவது சீசன் ஒளிபரப்பாக இருக்கிறது.

இந்த சீசன் ஆடிஷன் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. அதன்படி இந்த சீசனின் முக்கிய போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்திருக்கிறது. அதன்படி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் இர்பான் மற்றும் ஷாலினி சோயா இருவரும் நிகழ்ச்சிக்குள் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

கலகலப்பாக இருக்கும் இர்பானை நிகழ்ச்சிக்குள் அழைத்து வந்த அவர் மூலம் கண்டன்ட் கிடைத்தால் அது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இன்னும் பரபரப்பை உருவாக்கி கொடுக்கும். அதுபோல இன்னொரு போட்டியாளராக ஷாலின் ஜோயா குழந்தைத்தனமான செயலும், சரியாக உச்சரிக்காத தமிழும் ரசிகர்களிடம் ஏற்கனவே அப்பிளாஸ் வாங்கி இருக்கிறது.

தற்போது அவரை பிக்பாஸ் வீட்டிற்குள் அழைத்து வர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் ஷாலின் காதலரும், பிரபல யூட்யூப்பருமான டிடிஎஃப் வாசனையும் உள்ளே அழைத்து வர தயாரிப்பு நிர்வாகம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. ஏனெனில் வாசன் சமீப காலமாக தொடர் சர்ச்சையில் சிக்கிவரும் நிலையில் அவரை உள்ளே அழைத்து வருவது நிகழ்ச்சிக்கு மேலும் பரபரப்பை கொடுக்கும் என்கின்றனர்.

ஆனால் இது இன்னும் முடிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த முறை சமூக வலைத்தள நட்சத்திரங்கள் அதிகமாக இருக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் டிவியில் இருந்து தொகுப்பாளர் சிலரும் நிகழ்ச்சிக்குள் எண்ட்ரியாகவும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஏற்கனவே இந்திரஜாவுக்காக ரோபோ சங்கர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கோமாளியாக ஒரு எபிசோட் வந்து சென்றுள்ளார். அவரோ அல்லது மகளையோ பிக்பாஸுக்குள் இறக்கலாம் எனவும் தகவல்கள் கசிந்துள்ளது.

இது ஒரு புறம் இருக்க இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவாரா என்று சந்தேகமும் நிலவி வருகிறது. ஆனால் அதற்கு இடமில்லாமல் இந்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்குவார். ஏற்கனவே இந்தியன் 2 தோல்வி அடைந்திருக்கும் நிலையில் அதை சரி கட்ட பிக்பாஸ் அவருக்கு நல்ல பிளாட்பார்ம் ஆக அமையும் என அவர் நம்புவதாக கூறப்படுகிறது.

Next Story