BiggbossTamil: மொத்த விஜய் டிவியையும் இறக்கிட்டீங்க போல… இவங்கதான் அந்த 16 பேரா?

பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 6 முதல் தொடங்கப்பட இருக்கிறது.

By :  Akhilan
Update: 2024-10-04 09:45 GMT

விஜய் டிவியில் இந்த வார இறுதியில் இருந்து ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

100 நாட்கள் ஒரே வீட்டில் 60 கேமராக்கள் முன்னால் பிரபலங்கள் வாழும் அந்த வாழ்க்கையை ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கொடுத்து வந்தனர். ஏழு சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். ஒவ்வொரு சீசனும் வித்தியாசங்களை காட்டி ரசிகர்களை கவர்ந்தது.

ஆனால் இதில் கடந்த சீசன் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் பாராட்டுகளை பெறவில்லை. இதனால் இந்த சீசனில் மீண்டும் இழந்த புகழை தக்க வைத்துக் கொள்ள விஜய் டிவி நிறைய யுத்திகளை கையாண்டு இருக்கிறது. அந்த வகையில் கமல்ஹாசன் இடத்திலிருந்து தற்போது விஜய் சேதுபதி இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்.

நாளை பிக் பாஸின் முதல் நாள் எபிசோட் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. இதில், குக் வித் கோமாளியில் இந்த சீசனில் கலந்து கொண்ட ஷாலின் சோயா. விஜய் டிவியில் சீரியல்களில் நடித்து குக் வித் கோமாளி மூலம் புகழ்பெற்ற தர்ஷா குப்தா. இந்த சீசன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செல்லமா சீரியல் ஹீரோயின் அன்சிதா.

மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சஞ்சனா. தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் நாயகி பவித்ரா ஜனனி, குக் வித் கோமாளியில் கலந்து கொண்ட சந்தோஷ பிரதாப், விஜய் டிவியின் பழைய தொகுப்பாளினி ஜாக்லின். பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடித்த விஜே விஷால்.

பாரதி கண்ணம்மா ஹீரோ அருண் பிரசாத், தமிழும் சரஸ்வதியும் ஹீரோ தீபக், பன்முக கலைஞர் கோகுல்நாத், செல்லமா சீரியல் ஹீரோ அர்னவ் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர். மேலும் சமீபத்திய சென்சேஷன் பாடகர் பால் டப்பா, மாடல் அழகி சௌந்தர்யா, நடிகர் ரஞ்சித், தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், நடிகை ஐஸ்வர்யா உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதில் ஒன்று இரண்டு பிரபலங்களை தவிர மற்ற அனைவரும் விஜய் டிவி பிரபலங்கள்தான். எப்பொழுதும் ஒரு சீசனுக்கு இரண்டு அல்லது மூன்று பிரபலங்களை மட்டுமே விஜய் டிவியில் இருந்து இறக்குவார்கள். ஆனால் இந்த சீசனில் ரசிகர்களிடம் ஏற்கனவே புகழில் இருக்கும் பலர் உள்ளே நுழைந்து இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Tags:    

Similar News