மீனா, பழனியின் பிளான்… எழிலை வளைத்த கோபி… கடுப்பில் ரோகிணி..
VijayTV: சிறகடிக்க ஆசை தொடரில் மூவரும் குடித்துவிட்டு வந்த கோபத்தில் அண்ணாமலை வெளியில் படுக்க சொல்கிறார். விஜயா முத்துக்கு மட்டும் தண்டனை கொடுக்க சொல்ல அவர் திட்டி உள்ளே அழைத்து செல்கிறார். மனோஜ் ஓவராக பேச அவரை தள்ளிவிடுகிறார். மனோஜ் தூங்கிவிடுகிறார்.
முத்து தூங்காமல் இருக்க அவருடன் மீனா அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார். பார்லர் அம்மா,பலகுரலை விட நீதான் நல்லா இருந்த மீனா. மனோஜுக்காக நீ செஞ்சது பெரிய விஷயம் என்கிறார். ரோகிணி மனோஜிடம் இருந்து போனை எடுக்க முடியாமல் கடுப்பில் வித்யாவிடம் திட்டிக்கொண்டு இருக்கிறார்.
பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியா ரெஸ்டாரெண்டு திறந்து இருக்க கூட்டம் பெரியதாக இல்லாமல் இருக்கிறது. பழனிசாமி தான் வேலை விஷயமாக பாரீன் செல்ல இருப்பதாக சொல்லி செல்கிறார். செல்வி கஷ்டமா இருக்கா எனக் கேட்க கஷ்டத்தை சொல்ல ஆள் இருந்துச்சு. அதான் என்கிறார்.
எழில் கோபி தயார் செய்து இருந்த தயாரிப்பாளரை பார்த்து பேசுகிறார். அவருக்கு எழில் சொன்ன கதை பிடித்துவிட உடனே ஓகே சொல்லிவிடுகிறார். எழிலும் சந்தோஷத்தில் அமிர்தாவிடம் சொல்லி சந்தோஷப்படுகிறார். பாக்கியாவிடம் இந்த விஷயத்தை சொல்ல அவரும் சந்தோஷப்படுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் கோமதி தன்னுடைய அம்மாவை வந்து பார்க்க தன்னுடைய அண்ணிகளுடன் சந்தோஷமாக பேசிக்கொண்டு இருக்கிறார். ராஜி அவருடைய அம்மா பேசாமல் இருப்பதால் வெளியில் இருக்கிறார். கதிர் வர அவரிடம் சொல்லி வருத்தப்படுகிறார்.
வீட்டில் பாண்டியன் வர அவரிடம் பொய் சொல்லி மீனா சமாளித்து கொள்கிறார். கோமதி பேசி முடித்துவிட்டு பழனி இனி அண்ணன்களை சமாளிக்க முடியாது. நான் கிளம்பி செல்கிறேன் எனக் கூறிவிட்டு செல்கிறார். இதனுடன் இன்றைய எபிசோட்கள் முடிந்தது.