சோசியல் மீடியாவிலும் சண்டையா? பிக்பாஸ் அர்ச்சனா மற்றும் மாயாவுக்கு என்னதான் பிரச்சினை?

by Rohini |
mayaarchana
X

mayaarchana

பிக்பாஸ் சீசன் 7:

இதுவரை நடந்த சீசன்களில் ஏழாவது சீசன்தான் மக்களின் அதிக வெறுப்பை சம்பாதித்த சீசனாகவும் விறுவிறுப்பாக போன சீசனாகவும் இருந்தது. ஏழாவது சீசன் ஆரம்பத்தில் இருந்தே சண்டையில்தான் ஆரம்பித்தது. நாள் ஒன்றிலிருந்து 100வது நாள் வரைக்கும் ஒரே சண்டை, வாக்குவாதம், கூச்சல் என பார்ப்போரை எரிச்சலடைய செய்த சீசனாகவும் இருந்தது.

அதற்கு நேர் மாறாக இந்த சீசன் இருந்தது. ஆனால் 78 நாள்களை கடந்த பிறகுதான் போட்டியாளர்களுக்கிடையில் கடும் மோதல் ஆரம்பித்திருக்கிறது. நேற்று ரஞ்சித் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியிருக்கிறார். இந்த நிலையில் எட்டாவது சீசன் சூடுபிடிக்க தற்போது கடந்த சீசனில் போட்டியாளர்களாக இருந்த மாயாவும் அர்ச்சனாவும் சோசியல் மீடியாவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்படி என்னதான் ஆச்சு என பார்த்தால் மாயா போட்ட ஒரு சிறு பதிவு அர்ச்சனாவை கோபப்படுத்தியிருக்கிறது.

மாயாவின் பதிவு:

இதற்கு முந்தைய சீசனில் சில போட்டியாளர் பிஆர் டீம்களை வைத்திருந்தார்கள். அந்த பிஆர் டீம்களால் பெரிய மிரட்டல்கள் எல்லாம் நாங்கள் சந்தித்தோம் என தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் மாயா பதிவிட்டு இருந்தார். இதில் மாயா தெரிவித்த போட்டியாளர் அர்ச்சனாதான் என ரசிகர்கள் கூறிவர இதை பார்த்த அர்ச்சனா மாயாவிற்கு பதிலடி கொடுத்திருந்தார்.

அதாவது எக்ஸ் தள பக்கத்தில் மாயா நீங்கள் பதிவிட்டிருந்த பதிவை நான் பார்த்து விட்டேன். உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நடந்ததை நினைத்து அனுதாபப்படுகிறேன். உங்களுடைய பதிவில் கடந்த சீசனில் யாரோ ஒருத்தரின் பிஆர் ஸ்டாண்ட் என் குடும்பத்தையே விட்டு வைக்கல அப்படின்னு சொல்லி இருக்கீங்க. இது எல்லாவற்றையும் நான் பார்த்து விட்டேன்.


அர்ச்சனாவில் பதில்:

நாம ரெண்டு பேருமே கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறோம். இந்த நேரத்தில் சந்தர்ப்பவாதியாக நடந்து கொள்வதை விட நீங்கள் எனக்கு பக்க பலமாக இருக்கலாம். அதே நேரத்தில் செடி வாடி போச்சுன்னு சொல்லு தண்ணி ஊத்திட்டு போறேன் அப்படிங்கற மாதிரி பதிவுகளை எல்லாம் தயவு செய்து தவிர்த்திடுங்கள் என அர்ச்சனா பதிலுக்கு கூறியிருக்கிறார்.

உடனே இதற்கு மாயாவும் யார் என்றே தெரியாத இரண்டு பேர் கடந்த சீசனில் எனக்கு கால் பண்ணி மிரட்டுனாங்க. எனக்கு நடந்த விஷயத்தை நான் சொன்னேன். அவ்வளவுதான் .நீங்கள் தான் இந்த பதிவை தவறாக புரிந்து விட்டீர்கள். உங்களுக்கு நடந்த விஷயத்துல நான் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறேன். என்னுடைய அனுபவத்தை பகிர நினைத்தேன் அவ்வளவுதான் அர்ச்சனா என மாயா அதற்கு பதில் கூறியிருக்கிறார்.

Next Story