மகாநதி சீரியலில் இனி காவேரியாக சிறகடிக்க ஆசை மீனா… இது என்ன புது ட்விஸ்ட்டா இருக்கே?

Mahanathi: விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொடரான மகாநதி சீரியலில் இனி காவேரியாக சிறகடிக்க ஆசை மீனா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பொதுவாக விஜய் தொலைக்காட்சி சீரியல்கள் இதுவரை பெரும்பாலும் இந்தி தொடரின் ரீமேக்காக தான் தயாரிபபர்கள். இல்லையென்றால் ஒரிஜினல் சீரியலை மொழி மாற்றம் செய்து வெளியிட்டு நல்ல வரவேற்பையும் பெற்றது.
ஆனால் கடந்த சில வருடங்களாகதான் விஜய் தொலைக்காட்சியில் தயாரிக்கப்பட்ட சீரியல்கள் தொடர்ந்து வெளியானது. சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ், அய்யனார் துணை என தமிழ் சீரியல்கள் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகியது.
இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் இளைஞர்களிடம் நல்ல ஹிட் கொடுத்த மகாநதி சீரியல் தற்போது ஏசியாநெட்டில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. இந்த சீரியலின் லீட் ரோலில் தற்போது நடிகை கோமதி பிரியா நடிக்க இருக்கிறார்.

தமிழில் சின்ன சின்ன சீரியலில் நடித்து வந்த அவர், தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கேரக்டரில் ரசிகர்களிடம் தனக்கென ஒரு அடையாளத்தை பெற்றார். இதன் தெலுங்கு ரீமேக்கிலும், மலையாள சீரியல்களிலும் கோமதி பிரியாவுக்கு நடிக்க வாய்ப்பு வந்தது.
இந்நிலையில் தற்போது லவ் டிராக்கில் ஹிட்டடித்த மகாநதி சீரியல் தற்போது மலையாளத்தில் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. தற்போது விஜய் தொலைக்காட்சியின் ஒரிஜினல் கதையில் தொடர்ந்து நிறைய சீரியல் வருவதும் இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.