ஷகிலா மம்மி வித்தியாசமா கூவுறாங்க!.. கலாய்த்து வீடியோ போட்ட மணிமகேலை!...

தனது சொந்த வாழ்வை பற்றி பேசிய ஷகிலாவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் மணிமேகலை...

By :  Admin
Update: 2024-09-22 04:50 GMT

Cook with comali: கடந்த சில நாட்களாகவே ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்படும் விஷயமாக இருப்பது பிரியங்கா - மணிமேகலை விஷயம்தான். விஜய் டிவி மூலம் பிரபலமானவர்கள் பலரும் இருக்கிறார்கள். அதேபோல், விஜய் டிவியை நம்பி மட்டுமே வாழ்க்கையை ஓட்டுபவர்களும் இருக்கிறார்கள்.

விஜய் டிவியில் பல தொகுப்பாளினிகள் இருக்கிறார்கள். டிடி(திவ்ய தர்ஷினி), ரம்யா, பிரியங்கா என பலரும் உள்ளனர். அதேபோல், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழ், பாலா, மணிமேகலை என பலரும் பிரபலமானார்கள். ஒருபக்கம், காமெடி நிகழ்ச்சி மூலம் ராமர் போன்றவர்களும் பிரபலமாகியுள்ளனர்.

இதில், ராமர், புகழ், பாலா ஆகியோருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. விஜய் டிவியில் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக இருப்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான். பல எபிசோட்களை தாண்டி இது ஒளிபரப்பாகி வருகிறது. செட் தாமு, வெங்கடேஷ்பட், மாதம்பட்டி ரங்கராஜ் என பலரும் அதில் ஜட்ஜாக இருக்கிறார்கள்.

சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் போது விஜே பிரியங்காவுக்கும், மணிமேகலைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பிரியங்காவிடம் நீ மன்னிப்பு கேள் என மணிமேகலையிடம் விஜய் டிவி சொல்ல தன்மானமே முக்கியம் என சொல்லி குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்தே விலகுவதாக சொன்னார் மணிமேகலை.


சமூகவலைத்தளங்களில் பலரும் மணிமேகலைக்கு ஆதரவாகவே பலரும் கருத்து சொன்னார்கள். பிரியங்கா எப்போதும் மற்றவர்களை வளரவிடமாட்டார். அவரை மீறி ஒருவர் வெற்றி பெறுவதுபோல தெரிந்தால் சதி செய்து அவரை வெளியேற்றிவிடுவார் என பலரும் சொன்னார்கள். மேலும், பிரியங்கா தனது முன்னாள் கணவரின் வாழ்க்கையை பாழாக்கிவிட்டார் என்றும் பலரும் பதிவிட்டார்கள்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற நடிகை ஷகிலா இதுபற்றி கருத்து சொன்னபோது ‘ ‘பிரியங்கா விவாகரத்து பெற்ற பெண் என்றால் மணிமேகலை வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டவர். இவர்களையெல்லாம் நம் பெண் பிள்ளைகளுக்கு உதாரணமாக சொல்ல முடியுமா?’ என கேட்டிருந்தார்.

இந்நிலையில், தன் கணவருடன் சேர்ந்து வீடியோ போட்ட மணிமேகலை ‘நான் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டதற்கு என் அம்மாவே வருத்தப்படவில்லை. ஆனால், ஷகிலா மம்மி வருத்தப்பட்டிருக்கிறார். சரி பேசுவதற்கு ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விஷயம். அதுபற்றி நான் கவலைப்படவில்லை’ என பேசியிருக்கிறார்.

Tags:    

Similar News