Pandian Stores2: ராஜியின் கல்யாண கதையால் கதிர் குறித்து பெருமை பேசும் குடும்பத்தினர்!

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
மீனா மற்றும் கோமதி இருவரும் தங்கள் கணவரிடம் எதுவும் உளற கூடாது என்ற முடிவுடன் ரூமிற்கு செல்கின்றனர். பாண்டியன் கதிர் குறித்து பெருமையாக பேச கோமதி எதுவும் சொல்ல முடியாமல் ஆமாங்க, ஆமாங்க எனக் கூறிக்கொண்டு இருக்கிறார்.
அதுபோலவே செந்திலும் கதிர் குறித்து பெருமையாக பேச மீனாவும் அதாங்க, ஆமாம் எனச் சொல்லிக்கொண்டு இருக்கிறார். பாண்டியன் கோமதியிடம் என்னடி ஆமாம்னு சொல்லிட்டு இருக்க எனக் கேட்க வேற என்ன சொல்றது என தெரியவில்லை என சமாளிக்கிறார்.
ராஜியின் வீட்டில் அவர் அம்மா அழுதுக்கொண்டு இருக்கிறார். முத்துவேல் என்ன ஆச்சு எனக் கேட்க ராஜியின் நிலைமை நினைச்சு அவர் கலங்கி பேசுகிறார். என்னதான் கதிர் நல்லவனா இருந்தாலும் அவங்க உறவு எப்படி இருக்குனே தெரியலையே என அழுதுக்கொண்டு இருக்கிறார்.
அடுத்த நாள் காலை சரவணன் மற்றும் பழனி கடை விஷயமாக பேசிக்கொண்டு இருக்க அங்கு வரும் செந்திலிடம் சரவணன் பற்றி புகார் சொல்கிறார் பழனி. ஆனால் சரவணன் வேறு எதோ பார்த்துக்கொண்டு இருக்க என்ன விஷயம் எனக் கேட்கிறார் பழனி.
ஆன்லைனில் 7 சர்ட், ஒரு செண்ட் இருக்க இதுக்கு காசு எங்கடா என பழனி கேட்கிறார். இப்போ இல்ல ஆனா சம்பளம் வந்த பிறகு வாங்குவேன் என்கிறார். சரவணன் சம்பளத்தை நீ அப்பாக்கிட்ட கொடுக்கணும் தானே எனக் கேட்க கொடுப்பேன். ஆனா முழுசா இல்ல என்கிறார்.
அப்போ அங்கு கதிர் வர அவரிடம் செந்தில், சரவணன் விசாரணையை போடுகின்றனர். நான் மீனாவுக்கு ஒருமுறை ரீசார்ஜ் செஞ்சி கொடுத்தேனே எவ்வளவு எனக் கேட்க 149 என்கிறார். சரவணன் நான் காதலித்த பெண்ணை முதல்முறையா எங்க அழைச்சிட்டு போனேன் எனக் கேட்க கோயில் என்கிறார் கதிர்.

தெரிதுல நாங்க செஞ்சதெல்லாம் உனக்கு தெரியுதே. அதுபோல ஏன் எங்களிடம் இதை சொல்லலை எனக் கேட்க சொல்ல தோணலை என்கிறார். சொல்லி இருந்தா நீ நல்லவனா மாறி இருப்பீயே எனக் கேட்க அதுசரி, ஆனா ராஜி என்ன ஆகிருப்பா என்கிறார்.
இதில் மற்றவர்கள் ஆச்சரியமாக ராஜியுடன் இப்போ உன் ரிலேஷன்ஷிப் எப்படி இருக்கு எனக் கேட்க கதிர் பதில் சொல்லாமல் ராஜிக்கு டைம் ஆச்சு. அவளை அழைச்சிட்டு வரப்போறேன் எனக் கூறிவிட்டு கிளம்புகிறார். இதில் மற்றவர்கள் சிரித்து கொள்கின்றனர்.
ராஜியை பார்க்க வரும் கதிரை அவர் பைக் எங்கே எனக் கேட்கிறார். எல்லாரும் கலாய்ச்சாங்க. அதான் பைக்கை எடுத்துட்டு வராம மறந்து நடந்து வந்துவிட்டதாக சொல்கிறார். பின்னர் ராஜி மற்றும் கதிர் பேசிக்கொண்டு இருக்க அங்கு வருகிறார் முத்துவேல்.