Pandian Stores2: ராஜியின் உண்மையால் முத்துவேல், சக்திவேல் உறவில் விழும் விரிசல்!

by Akhilan |
Pandian Stores2: ராஜியின் உண்மையால் முத்துவேல், சக்திவேல் உறவில் விழும் விரிசல்!
X

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

முத்துவேல் பைக்கில் வந்திருக்க அவரை நிறுத்தி ராஜி தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து பேசிக் கொண்டிருக்கிறார். இந்த கல்யாணம் என்னை மீறி நடந்தாலும் உங்களிடம் இதைக் குறித்து சொல்ல பலமுறை முயற்சி செய்திருக்கிறேன்.

ஆனால் அதற்கான வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. அந்த வீட்டில் இருப்பவர்கள் என்னை நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள். அரசி இருந்த நிலைமையில் நானும் இருக்கிறேன். அண்ணனோட வாழ்க்கையும் இதில் கெட்டுப் போயிடக்கூடாது என்பதற்காகத்தான் இதை சொன்னேன் எனவும் கூறுகிறார்.

இனிமேல் அந்த குடும்பத்தின் மீது எந்த பழியும் போடாமல் அண்ணனின் வாழ்க்கையை பார்க்கக் கூறுங்கள் என முத்துவேலிடம் சொல்ல அவர் எதுவும் பேசாமல் சென்று விடுகிறார். ஆனால் இதை தூரத்தில் இருந்து பார்த்த சக்திவேல் கோபமாகி வீட்டிற்கு செல்கிறார்.

ராஜி கதையிடம் வந்து எங்க அப்பாவிடம் என்ன பேசினேன் என கேட்க மாட்டியா என கேட்கிறார். எனக்கு இப்ப அதெல்லாம் எதுவும் வேணாம். போய் சாப்பிட்டு வீட்டுக்கு போவோம் என ராஜியை அழைத்து செல்கிறார். செந்தில் மற்றும் மீனா வேலைக்கு கிளம்பிக்கொண்டு இருக்க செண்ட்டை ஓவராக அடித்து கொண்டு செல்கிறார் செந்தில்.

வெளியில் வர குடும்பத்தினர் தான் சொல்லிக் கொண்டிருக்கும்போது அங்கு வரும் பாண்டியன் ஒரு நாத்தமா இருக்கு என கேட்கிறார். அரசி எங்களுக்கு அண்ணனோட சென்டு ஸ்மெலு தான் வருது. உங்களுக்கு மட்டும் என்ன வாட வருது என கேட்க செந்திலை மறைமுகமாக தாக்கி பேசுகிறார் பாண்டியன்.

பாண்டியன் சென்றவுடன் தன்னுடைய சம்பளம் வந்ததும் பத்தாயிரத்துக்கு செண்ட்டு வாங்குவேன் என செந்தில் கூற மீண்டும் வரும் பாண்டியன் அதைக்கேட்டு அவரை திட்டி விட்டு செல்கிறார். தங்கமயில் மற்றும் சரவணன் பேசிக் கொண்டிருக்கும்போது மயில் கேட்கும் கேள்விகளுக்கு அவர் பொறுமையாக பதில் சொல்லிவிட்டு கிளம்பி செல்ல தன் மீது உள்ள கோபம் குறைவதாக சரவணன் நினைத்துக்கொள்கிறார்.

ராஜி மற்றும் கதிர் அமர்ந்து இருக்க கோமதி லோன் விஷயம் குறித்து கேட்க ராஜியிடம் நீ எதுவும் செய்ய வேண்டாம் நாங்க பார்த்துக்கிறோம் எனவும் கூறுகிறார். வீட்டிற்கு வரும் சக்திவேல் முத்துவேலிடம் பொண்ணுடன் சேர்ந்தாச்சா என சத்தம் போட அவர் விஷயம் தெரியாமல் பேசாதே என திட்டி விட்டு செல்கிறார்.

சக்திவேலும் அப்பத்தா மற்றும் ராஜியின் அம்மாவிடம் விஷயத்தை விஷயத்தை விட்டு செல்ல இவர் ஏன் புரிந்துக்கொள்ளாமல் பேசுகிறார் என இருவரும் கவலைப்படுகின்றனர். ஆனால் குமாரின் அம்மா திடீரென அவருக்கு சப்போர்ட் செய்து பேச அதிர்ச்சியில் அவரை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Next Story