Pandian Stores2: அரசி பிரச்னையால் மீண்டும் கடுப்பான கோமதி… திடீரென பாண்டியன் எடுத்த முக்கிய முடிவு!

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
அரசி வீட்டிற்குள்ளே இருப்பதால் அவரை வெளியில் அழைத்துச் செல்ல முடிவெடுக்கிறார் கோமதி. இருவரும் கிளம்பி வெளியில் வர எதிர் வீட்டில் அப்பத்தா வாசலில் அமர்ந்திருக்கிறார். அரசியை பார்த்துவிட்டு அவர் பேச வர அப்பொழுது அங்கு வரும் கோமதி அவரை திட்டிவிட்டு செல்கிறார்.
பின்னர் இருவரும் சேர்ந்து கடைக்கு செல்லும் போது வழியில் பார்க்கும் பெண்கள் அரசியிடம் மோசமாக கேள்விகளை முன்வைக்கின்றனர். அவர்களை கோமதி திட்டி விட்டு செல்ல இன்னும் சில பெண்கள் தெருவில் நிற்பதை பார்த்து இன்னைக்கு போக வேணாம் வீட்டிற்கு செல்லலாம் என அரசியை அழைத்துக் கொண்டு செல்கிறார்.
வீட்டிற்கு வரும் கோமதி வாசலில் இருக்கும் அப்பத்தாவை பார்த்து தப்பு செஞ்ச உங்க வீட்ல இருக்கவங்க எல்லாம் நல்லா இருக்காங்க என ஜாடை பேசிவிட்டு வீட்டிற்குள் செல்கிறார். கோமதி கோபத்தில் உட்கார்ந்து இருக்க அப்பொழுது சுகன்யா காபி எடுத்து வருகிறார்.
அதை பார்க்கும் கோமதி, நான் இப்படி கஷ்டப்படறதுக்கு நீயும் தான் காரணம். என் பொண்ணோட வாழ்க்கையில விளையாடிய யாரும் நல்லாவே இருக்க மாட்டாங்க. அவங்களுக்கு கண்டிப்பா தண்டனை கிடைக்கும் என திட்டி அனுப்புகிறார்.

பின்னர் பாண்டியன் வர வெளியில் நடந்ததை அவரிடம் சொல்கிறார் தங்கமயில். அரசியை அழைத்து சமாதானம் செய்யும் பாண்டியன் இனிமேல் அரசி குறித்து யாரும் பேசாத வண்ணம் தான் ஒன்று செய்ய இருப்பதாக சொல்லி செல்கிறார்.
வாசலில் சுகன்யா சோகமாக நிற்க அவரிடம் வந்து பேச்சு கொடுக்கிறார் தங்கமயில். தன்னுடைய வாழ்வில் நடந்த முதல் திருமணம் குறித்தும் டைவர்ஸ் குறித்தும் சுகன்யா வருத்தப்பட்டு தங்கமயிலிடம் பேசிக் கொண்டிருக்கிறார். பின்னர் தன்னுடைய அக்காவை பார்க்க செல்வதாக கூறி குமார் வீட்டிற்கு சென்று விடுகிறார்.
மருமகள்களுடன் கோமதி உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க அப்பொழுது வரும் பாண்டியன் அரசி எங்கே என கேட்கிறார். அவள் ரூமில் இருப்பதாக கூற அவளை அழைத்துக்கொண்டு வெளியில் செல்ல மைக் கட்டிய ஒரு ஆட்டோ வீட்டு வாசலில் இருக்கிறது.
இதை யார் நிறுத்தி இருக்கிறார்கள் என கோமதி கேட்டுக் கொண்டிருக்க பாண்டியன் பதில் சொல்வதற்குள் அவர் சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார். பின்னர் ஆட்டோக்காரர் வந்து பாண்டியனை கை காட்ட ஏன் என்னிடம் சொல்லவில்லை என கோமதி கேட்க நீ எங்க பேச விட்ட என அவரை திட்டுகிறார்.