Pandian Stores2: ராஜியின் திருமண ரகசியத்தை கிளறும் மயில்… அடுத்தவங்க விஷயத்தில வெவரமா இருக்கீங்களே!

by Akhilan |   ( Updated:2025-08-02 05:31:07  )
Pandian Stores2: ராஜியின் திருமண ரகசியத்தை கிளறும் மயில்… அடுத்தவங்க விஷயத்தில வெவரமா இருக்கீங்களே!
X

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

ராஜி வீட்டில் எல்லாரும் அமைதியாக இருக்க அங்கு வரும் சக்திவேல் எதுக்கு எல்லாரும் இப்படி யோசிச்சிட்டு இருக்கீங்க? அந்த ஓடிக்காளி சொன்னது உண்மைனு நினைக்கிறீங்களா? அதெல்லாம் சுத்த பொய் எனக் கூறுகிறார் சக்திவேல்.

அப்போ அங்கு வரும் பழனி, போதும் அண்ணா. நீங்க பேசுனத நிறுத்துங்க. ராஜி சொன்னது முழுக்க முழுக்க உண்மை என்கிறார். ஏன் உன்னை சொல்ல சொல்லி அனுப்புனாளா எனக் கேட்கிறார். நானே ராஜி இன்னொரு பையன் லவ் செஞ்சதை பாத்து இருக்கேன்.

கதிரும் அந்த பையனை பத்தியும், அவன் கேரக்டரை பத்தியும் சொல்லி இருக்கா என்கிறார். ஆனா திடீரென ஒருநாள் மாலையோடு வந்து நின்னப்ப எனக்கு எதுவும் புரியலை. நான் கேட்டப்ப கூட இரண்டு பேரும் காரணம் சொல்லி தான் சமாளிச்சாங்க என்கிறார்.

அதனால் ராஜி சொன்னது உண்மையா தான் இருக்கும் எனக் கூற பழனி பேச்சை நம்ப மறுக்கிறார் சக்திவேல். இப்போ என்ன அவளை அழைச்சிட்டு வந்து விருந்து போடணுமா? என் பையன் ஜெயிலில் இருப்பதே இங்க யாருக்கும் நியாபகமே இல்லையே என்கிறார்.

இப்போ யாரும் விருந்து போட சொல்லலை. குமாரையும் யாரும் மறக்கலை என்கிறார் அப்பத்தா. முத்துவேல் பேச வர சக்திவேல் உங்களுக்கு பொண்ணு பாசம் குழந்தை பெத்த பிறகுதான் வரும் நினைச்சேன். இப்பையே வரும் என நினைக்கவில்லை என்கிறார்.

எனக்குதான் பிள்ளை பாசம் என்னனு தெரியும் என அழுதுவிட்டு செல்கிறார். பழனி அவருக்கு இதை நம்ப முடியாம இருக்கலாம். ஆனா ராஜி சொன்னது முழுக்க முழுக்க உண்மைதான் எனக் கூறிவிட்டு செல்ல ராஜி குடும்பம் அமைதியாக நிற்கின்றனர்.

பின்னர், மீனா டீ வைத்து குடிக்க அங்கு ராஜி இருக்கிறார். கோமதி வர மூவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். ராஜி என் மேல எதுவும் கோபமா அத்தை எனக் கேட்க அதெல்லாம் இல்ல. நீ அதை பத்தி ஏன் யோசிக்கிற மாமா பாத்துப்பாரு என்கிறார்.

நல்லவேளை நீ நான்தான் செஞ்சு வச்சேனு சொல்லி இருந்தா நான் காலியாகிருப்பேன் என்கிறார். உடனே மீனா தெரிஞ்சா மட்டும் வெளியவா அனுப்பிடுவாரு. 10 நாளு பேசாம இருப்பாரு. அப்புறம் பழையப்படி கோமதினு தான் வருவாரு என்கிறார்.

உங்களை நான் எப்படி மாட்டிவிடுவேன் அத்தை. நீங்க நல்லதுதானே எனக்கு செஞ்சீங்க என்கிறார். கோமதி நீயும் எனப் பேச தொடங்க அங்கு மயில் வர எல்லாரும் பேச்சை மாற்றுகின்றனர். நீ போய் ரெஸ்ட் எடு. நாங்க சமைச்சிக்கிறோம் எனக் கூறிவிடுகிறார்.

மயில் என்னை ஏன் துரத்துறீங்க எனக் கேட்டு நீங்க எதோ பேசிட்டு இருந்தீங்களே. நான் வந்த பிறகு மாத்துனீங்க எனக் கூற அத்தை திட்டியதாக மீனா கூறுகிறார். இல்லையே நல்லதா தானே பேசுனாங்க என்கிறார் மயில். கோமதி மாமியார் பேசுனாலே திட்டுற மாதிரிதானே இருக்கும் என சமாளித்து பேசி மயிலை அனுப்பி விடுகிறார்.

பின்னர், ராஜி மற்றும் கதிர் பேசிக்கொண்டு இருக்கின்றனர். உனக்கு என் மேல் கோபமா எனக் கேட்க இப்போ இந்த கல்யாண கதையை சொல்லணுமா எனக் கேட்கிறார் கதிர். நம்ம கல்யாண ரகசியம் தெரியாம தானே அரசிக்கு குமார் அப்படி செஞ்சான்.

என்னோட அண்ணன் இப்போ ஜெயிலில் இருக்கான். அவன் வாழ்க்கையும் கஷ்டத்தில் இருக்கு. இந்த விஷயம் தெரிஞ்சா அவனும் அவன் வாழ்க்கையை பாத்துட்டு ஒழுங்கா இருப்பான் எனக் கூறுகிறார். இதில் ராஜி அழுக அவரை சமாதானம் செய்கிறார் கதிர்.

Next Story