8 வருடத்திற்கு பிறகு அம்மாவான விஜய் டிவி சீரியல் நடிகை... குவியும் வாழ்த்துக்கள்..!
பிரபல சீரியல் நடிகையான நேஹா ராமகிருஷ்ணனுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கின்றது.
சன் டிவி மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்கள் மூலமாக தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நேஹா ராமகிருஷ்ணன். இவர் முதன்முதலாக 2013 ஆம் ஆண்டு கன்னட தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லட்சுமி பாரம்மா சீரியல் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானார். அந்த சீரியலில் ஸ்ருதி என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு தொடர்ந்து அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின. அதன்பிறகு தெலுங்கில் சுவாதி சினுகுலு என்கின்ற சீரியலிலும், தமிழில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணப்பரிசு, ரோஜா என்ற சீரியல்களிலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாவம் கணேசன் தமிழ் சீரியல்களிலும் நடித்திருக்கின்றார் .
இவர் நடித்த தமிழ் சீரியல் அனைத்துமே இவருக்கு தமிழக மக்கள் மத்தியில் ஒரு சிறந்த இடத்தை பெற்று கொடுத்தது. நேஹா சந்தன் என்பவரை காதலித்து வந்தார். இதை தொடர்ந்து பெற்றோர்கள் சம்மதத்துடன் மிக எளிமையாக நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது. பின்னர் 2017 ஆம் ஆண்டு இவர்கள் சென்னையில் திருமணம் செய்து கொண்டார்கள்.
இவர்களின் திருமணத்திற்கு ஏகப்பட்ட சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். திருமணத்திற்கு பிறகும் நேஹா ராமகிருஷ்ணன் தொடர்ந்து சீரியல்களில் கவனம் செலுத்தி நடித்து வந்தார். திருமணமாகி 8 வருடம் கடந்த நிலையில் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருந்த இவர் சமீபத்தில் அம்மாவாக போகும் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்திருந்தார்.
தனது கணவருடன் எடுத்துக் கொண்ட கர்ப்ப கால புகைப்படத்தை பகிர்ந்த அவர் பின்னர் வளைகாப்பு புகைப்படங்களையும் பகிர்ந்து இருந்தார். இந்நிலையில் நேஹா ராமகிருஷ்ணனுக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த தகவலை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அப்பா அம்மா ஆகியுள்ள நேஹா ராமகிருஷ்ணன் மற்றும் சந்தன் கௌடாவுக்கு சமூக வலைதள பக்கங்களில் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.