Singapenne: சிங்கப்பெண்ணாய் மாறிய ஆனந்தி... இனிதான் இருக்குது வேட்டை!

by Sankaran |
aanandhi, anpu
X

சிங்கப்பெண்ணே: ஆனந்தி ஆஸ்டலுக்குள் வந்ததும் டயானாவும், ரெட்டினாவும் அவளை மனம் புண்படும்படி நக்கல் அடிக்கின்றனர். வார்டன் அவர்களைத் திட்டுகிறாள். ஆனால் மித்ராவோ ஆனந்திக்கு சப்போர்ட்டாகப் பேசுகிறாள். இது அனைவருக்கும் ஆச்சரியத்தைத் தருகிறது. வார்டன் கூட எப்பவும் நீ ஆனந்திக்கு ஆப்போசிட்டா தானே பேசுவே. இன்னைக்கு என்ன சப்போர்ட்டாப் பேசுறன்னு கேட்கிறாள்.

அதற்கு என்னம்மோ தெரியல மேம். ஆனந்தியை இந்த நிலைமையில பார்க்கும்போது மனசுக்குக் கஷ்டமா இருக்கு என்று சமாளிக்கிறாள். செக்யூரிட்டி கூட அவளைப் பாராட்டுகிறார். ஆனால் நான் தானே ஆனந்தியோட இந்த நிலைமைக்குக் காரணமானேன். பெரிய தப்பு பண்ணிட்டேனேன்னு மனம் வருந்துகிறாள் மித்ரா. ஆனந்தியை இக்கட்டான சூழலில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுவிக்க சிங்கப்பெண்ணாக மாற்றுகிறாள் வார்டன்.

ஆனந்தியிடம் நீ எதற்காக பயப்பட வேண்டும்? யாருக்காக பயப்பட வேண்டும். தப்பு செய்தால் தான் பயப்பட வேண்டும். தப்பு செய்யாதவரை தலைநிமிர்ந்து வாழலாம். நீ தலைகுனிந்து பயந்தபடி இருந்தால் நீ தப்பு செய்தது போல் ஆகி விடும். உன் வலி என்ன வேதனை என்னன்னு ஒண்ணும் புரிஞ்சிக்காதவங்களுக்கு நீ புரிய வைக்கணும்னு அவசியமில்ல. எல்லாருக்கிட்டயும் பரிவையும், பரிதாபத்தையும் நீ எதிர்பார்க்க வேண்டிய தேவையும் இல்ல.


உன்னைப் புரிஞ்சிக்கிட்ட நாங்க எப்பவும் உன் கூட இருப்போம். உன் நம்பிக்கையும், தெம்பும் இந்த விஷயத்துல தோத்துப் போயிடுச்சுன்னு உன் எதிராளிக நம்புறாங்க. அது பொய்யின்னு நீ நிரூபிக்கணும். ஆனந்தி இது உன் வாழ்க்கையில வேற மாதிரியான ஒரு புதுப்பயணம். இதுக்குப் பயந்தாலும் ஒத்து வராது. நீ நெருப்பா இருக்கணும். இன்னிக்கு உனக்கு நடக்குறது வேற யாருக்கும் நடக்கக்கூடாதுன்னு எல்லாருமே நினைக்கணும். தப்பு பண்ணா than பயப்படணும்.

இதைப் பண்ணவனோட முகத்திரையைக் கிழிச்சி அவனை நீ வெளிச்சத்துக்குக் கொண்டு வரணும். தேவையான நேரத்துல நாங்க உனக்கு ஏணியாகவும், படிக்கட்டாகவும் பக்கபலமா நாங்க எல்லாருமே இருப்போம். பலி பீடத்துல ஆட்டைத்தான் பலியிட்டதா சரித்திரம் இருக்குதே தவிர சிங்கத்தை அல்ல. நீ சிங்கமா மாறணும். உன்னோட உடை, பாவனை எல்லாமே மாறணும். நான் மாத்துறேன். வான்னு ஆனந்தியை வார்டன் அழைக்கிறாள்.

அதைக் கேட்டு ஆனந்தி தன் உடை, பாவனையை மாற்றுகிறாள். கோகிலா, ரெஜினா, வார்டன் உள்பட அனைவருமே பிரமிப்பாகப் பார்க்கின்றனர். இதற்கிடையே சௌந்தர்யா கோகிலா சென்னைக்கு வந்ததையும், ஆனந்தி விஷயத்தையும் அன்புவிடம் போனில் தெரியப்படுத்துகிறாள். அடுத்து என்ன நடக்கிறது என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம்.

Next Story