Singapenne: ஆனந்திக்கு முக்கியமான க்ளூ கொடுத்த அன்பு... வேட்டையில் சிக்கியது யாரு?

சிங்கப்பெண்ணே: ஆனந்தியை வார்டன் உரு ஏற்றி விட அவள் சிங்கப்பெண்ணாகவே மாறி விட்டாள். நடை, உடை, பாவனை என எல்லாமே ஒரு மாற்றம். கம்பீரம் தெரிகிறது. ஆனந்தி கம்பெனிக்கு வருகிறாள். அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர். அதே நேரம் அன்புவின் அம்மா லலிதா ஆனந்தி நீ சம்மதம்னு சொன்னதும் உன்னை அட்டைப்பூச்சி மாதிரி ஒட்டிக்கிட்டே வர்றா.
நீ கவனமா இரு. அதனால தான் திரும்பவும் கம்பெனிக்கே வந்துருக்கா. நீ இனி கம்பெனி போக வேணாம்னு சொல்கிறாள். அதற்கு அன்பு அவள் அப்படி அல்ல. என்னை அட்டைப்பூச்சி மாதிரி ஒட்டிக்கிட்டு இருந்தா கல்யாண மண்டபத்துல வச்சே என்னோட கர்ப்பத்துக்குக் காரணம் அன்புதான்னு சொல்லி என் மேல பழியைப் போட்டுக் கட்டி இருக்கலாம். ஆனா அவன் ஏன் செய்யல. தனக்கு நேர்ந்த கொடுமைக்குப் பழியை என் மேல போட வேணாம்னு நினைக்கிற நல்ல எண்ணம்தான். நீங்க நினைக்கிற மாதிரி அவ கிடையாது என்று சொல்கிறான் அன்பு. அது மட்டுமல்லாமல் துளசியை மஞ்சள் மீனை அன்னைக்கு மாதிரி பொரிச்சி கொரியர்ல பார்சல் அனுப்பு. நானும் ஆனந்தியும் கம்பெனில லஞ்ச் ஒண்ணா சேர்ந்து சாப்பிடுறோம்னு சொல்கிறான். மாப்பிள்ளை மாறின மாதிரி தெரியல. கொஞ்சம்கூட உன் பேச்சைக் கேட்க மாட்டேங்கறாரேன்னு மாமா லலிதாவிடம் கவலையில் சொல்கிறாள்.

கம்பெனிக்கு வந்த ஆனந்தியை வழக்கம்போல கருணாகரன் கலாய்க்கிறான். அப்போது அன்பு வந்து நிலைமையை சமாளிக்கிறான். ஆனந்தி அன்புவிடம் என் பிரச்சனை இருக்கட்டும். உங்க பிரச்சனையை சரி செய்யுங்க அன்பு என்கிறாள். எனக்கு என்ன பிரச்சனை என்கிறான் அன்பு.
உங்க கல்யாணத்துக்கு நல்ல பொண்ணா பார்த்து சீக்கிரம் முடிங்கன்னு சொல்கிறாள். அதை மறுக்கும் அன்பு ஆனந்தியை இக்கட்டான நிலையில் என்னால விட முடியாது. இதுமாதிரி நேரத்துல தான் கூட இருக்கணும். சுத்தி இருக்குறவங்க என்ன நினைப்பாங்கன்னு எனக்கு கவலை இல்லைன்னு சொல்கிறான். ஆனந்தி அது சரி வராதுன்னு சொல்ல அன்பு கேட்க மறுக்கிறான். அப்போது மகேஷ் கம்பெனிக்கு வருகிறான். அன்பு, ஆனந்தி வந்த விஷயம் தெரியவருகிறது. அதே நேரம் ஆனந்தியின் கர்ப்பத்துக்குக் காரணமான ஒரு முக்கியமான க்ளூவை அன்பு சொல்கிறான். அப்போதுதான் ஆனந்திக்கும் அன்பு சொன்ன உண்மை தெரிய வருகிறது. என்னன்னு நாளைய எபிசோடில் பார்க்கலாம்.